இதான் மேனர்ஸா.. இப்படிதான் நடந்துப்பீங்களா? அதுவும் சேரன் சார்கிட்ட.. மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 17 : Promo 1: சேரன் கோவத்தில் இப்படி பண்ணிட்டாரே- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா சேரன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரை அவமதிக்கும் வகையில் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.

ஏற்கனவே சேரன் அமைதியாக பேசிய போதெல்லாம் எதிர்த்து எதிர்த்து பேசி, அவர் சொல்வதை கொஞ்சமும் காதில் போட்டுக் கொள்ளாமல் நடந்து கொண்டார் மீரா. அப்போதே டென்ஷன் ஆன சேரன், அடுத்தடுத்த எபிசோடுகளில் நீ என்னிடம் பேசாதே என்று கூறியதை பார்த்தோம்.

மன்னிப்பு கேட்ட சேரன்

மன்னிப்பு கேட்ட சேரன்

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சேரன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஏற்கனவே, வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகிறாய் என அவர் கூறியதை எடுத்து வம்பிழுக்கிறார் மீரா. அதற்கு சேரன் மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் நைநை என்று பேசி பிரச்சனையை வளர்த்த மீரா சேரன் பேசிக்கொண்டிருக்கும் போதே எழுந்து செல்கிறார்.

அவ மதித்த மீரா

அவ மதித்த மீரா

இந்த புரமோவை பார்த்த மக்கள் கொந்தளித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் சேரன். அவரின் வயதுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் மீரா எழுந்து செல்வதை மக்கள் கண்டித்துள்ளனர்.

யோசிங்க

இங்க பாருங்க பசங்களா மீராவ எல்லாரும் கார்னர் பண்றமாதிரி மக்கள நினைக்க வச்சு ஓட்டு வாங்க பாக்குது.. ஓட்டு போடுறதுக்கு முன்னாடி யோசிங்க.. அவங்க ஒரு நாடக ராணி. மேலும் அந்த பஜாரி கும்பல் மீராவுக்கு பிரன்ட்ஸ் ஆயிட்டாங்க.. மீரா மற்றவர்கள் தன்னை கொடுமை படுத்துவதை போல காட்டுகிறார். பக்கா ஃபிராடு என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பருப்பு வேகல மீரா

அதான் சாரி சொல்லிட்டாருல்ல அதோட முடிஞ்சதுன்னு போக வேண்டியதுதானே.. பருப்பு வேகல மீரா.. என்கிறார் இந்த நெட்டிசன்.

அதான் தெரியும்

மீரா இப்படிதான் நடந்து போவா.. அதுதான் அவளுக்கு தெரியும். முகென்கிட்டயும் இதையேதான் செய்தாள். முகெனுக்கு கோவப்படாதன்னு அட்வைஸ் பண்ணுன சேரன் இப்போ அதே ட்ரிட்மென்ட்டை அனுபவிக்கிறார். என்கிறார் இந்த நெட்டிசன்.

பத்து பொருத்தமும் பக்கா

சபை நாகரிகம் தெரியாத ஆணவக்காரி முதலில் வெளியேற்றபட பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நாகரீகமே இல்லை

சேரன் சாரிடம் அவமரியாதையாக நடக்காதே மீரா.. அவர் நாகரிகமான மனிதர்.. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் ஏன் இப்படி இடையிலேயே எழுந்து செல்கிறார்கள்? நாகரீகமே இல்லை. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உளறு வாய் மீரா

மனுஷன நிம்மதியா சாப்பிட விடனும் என்கிற மேனர்ஸ் கூட கிடையாதா? அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை கூட மீராவால் காத்திருக்க முடியாதா? அதற்குள் உளறு வாயை திறந்து விட்டார் என கடிந்து கொள்கிறார் இந்த நெட்டிசன்.

கோவப்பட வச்சீட்டிங்க?

என்னடா சேரன் சாரையே கோவப்பட வச்சீட்டிங்க? மீரா எதாச்சும் ஒன்னு பேசிட்டே இருப்பா.. அதுவும் ஒருத்தங்க சாப்டுறப்போ கேக்கனுமா? மூளையில்லாதவள்.. எல்லா சண்டையும் சாப்பிடுறப்போ இல்ல டைனிங் டேபிள்ளதான் நடக்குது.. மரியாதை குறைவான நடவடிக்கை. என்கிறார் இந்த நெட்டிசன்.

பச்சோந்தி மீரா

அடிப்படையாகவே மீராமிதுன்கிட்ட தப்பு இருக்கு.. பேசத் தெரியாம பேசி பிரச்சினையை உருவாக்குறா.. மேலும் அவ ஒரு சிறந்த பச்சோந்தி.. என சாடுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X