அடுத்து யாரு நயன்தாராவா? நடிகைகளை வம்பிழுக்கும் மீரா மிதுன்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை கண்டப்படி விளாசிய நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையா விமர்சித்து டிவிட்டினார் மீரா மிதுன். தன்னை பார்த்து காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்துவதாக விளாசியிருந்தார்.
மேலும் ஒரு தெலுங்கு பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழச்சி போன்று நடித்து பட வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் வெட்கங்கெட்டவர் என்றும் தரக்குறைவாக பேசினார் மீரா மிதுன்.
என்னதாம்மா பிரச்சனை
மீரா மிதுனின் இந்த டிவிட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்துள்ளனர். மீரா மிதுனின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், என்னதாம்மா உன் பிரச்சனை.. உங்களை யாரும் கண்டுக்கலதான அப்புறம் எதுக்கு உளறிக்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார்.
அந்த டேக்க காணோம்
மற்றொரு நெட்டிசனான இவர், அவங்க ஒரு சாதாரண டிவி ஆங்கர்லேருந்து இப்போ இந்தமாதிரி ஒரு நடிகையாக ஆகியிருக்காங்க. உங்கள மாதிரி ஊமை குத்தா குத்தி வரல.. என காட்டமாக பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் எப்போதுமே மோடிக்கு டேக் பண்ணுவீங்க எங்க அந்த டேக்க காணோம் என பதிவிட்டுள்ளார்.
அடுத்து நயன்தாராவா?
இந்த நெட்டிசன், எல்லா வழியிலும் ஃபிரி பப்ளிசிட்டி.. அடுத்து யாரு நயன்தாராவா என கேட்டு விளாசியுள்ளார். மற்றொரு நெட்டிசன், ஆமா நீங்க கிழிச்சிட்டீங்க நடிப்பு பத்தி பேச வந்துட்டீங்க எனற் சாடியுள்ளார்.
வெட்கம் இல்லையா?
இன்னும் சில நெட்டிசன்கள், ஏன் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்தான் உங்களுக்கு டார்கெட்டா என கேட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், குடிச்சுருக்கீங்களா? போதை தலைக்கு ஏறிவிட்டதா? உங்களுக்கு வெட்கம் இல்லையா என கடுமையாக விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











