துபாய்க்கு கூட்டிப்போய் பலாத்காரம் செய்தாரா நிவின் பாலி?.. Casting Call நடத்தியதே அதற்குத்தானா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலி இளம் பெண்கள் வேண்டும் என காஸ்டிங் கால் நடத்தியதே இப்படி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்யத்தானா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் #NivinPauly ஹாஷ்டேக்கை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், நிவின் பாலி நடித்த மலையாளி ஃபிரம் இந்தியா உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

nivin pauly hema committee sexual assault

மோகன்லால் மகன் ஹீரோவாக நடித்த வருஷங்களுக்கு சேஷம் படத்திலும் நிவின் பாலி இந்த ஆண்டு கேமியோ ரோலில் நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில், நடிகர் நிவின் பாலி மீது பலாத்கார புகாரை இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து எர்ணாக்குளத்தில் உள்ள ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிவின் பாலி மீது பாலியல் புகார்: படத்தில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என நடிகர் நிவின் பாலி தன்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார் என்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் செய்த பாலியல் கொடுமைகளையும் இளம்பெண் ஒருவர் கூறிய நிலையில், நிவின் பாலி உள்பட 6 பேர் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துபாயில் அட்டகாசம்: நடிகர் நிவின் பாலி படத்தில் நடிக்க வைக்கிறேன் என அந்த இளம் பெண்ணை துபாய்க்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இந்த புகார் குறித்து நடிகர் நிவின் பாலி எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. #NivinPauly ஹாஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

காஸ்டிங் கால் அதுக்குத்தானா?: நிவின் பாலி தனது படத்தில் நடிக்க நன்றாக வெஸ்டர்ன் மற்றும் கிளாசிக்கல் நடனம் ஆடத் தெரிந்த 20 முதல் 28 வயதுக்குள் இருக்கும் இளம் பெண் தேவை என்றும் அவருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளும் வழங்கப்படும் என்று அறிவித்த காஸ்டிங் கால் அழைப்பு போஸ்டரை ஷேர் செய்து தற்போது நெட்டிசன்கள் இதற்குத்தான் இப்படி இளம்பெண்களை நிவின் பாலி தேர்வு செய்தாரா? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

nivin pauly hema committee sexual assault

அபாண்டமான குற்றச்சாட்டு: நிவின் பாலியின் தீவிர ரசிகர்கள் வேண்டுமென்றே நிவின் பாலி மீது இப்படியொரு குற்றச்சாட்டை அந்த பெண் முன் வைத்துள்ளார் என்றும் பட வாய்ப்பு தருவதாகக் கூறி பலாத்காரம் செய்தால் அப்போதே ஏன் அந்த பெண் வாய் திறக்கவில்லை என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். சோஷியல் மீடியா முழுவதும் நிவின் பாலி குறித்த விவாதங்கள் வெடித்துள்ளன. இதுதொடர்பாக விரைவில் நிவின் பாலி அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு கடல் ஏழு மலை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழா, மாஸ்கோ திரைப்பட விழா என பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிவின் பாலி மீது இப்படியொரு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X