புது மாப்பிள்ளை இது கூட இல்லாம எப்படி.. மாதம்பட்டி ரங்கராஜை யாராலையும் அசைக்க முடியாதாம்!
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில வாரங்களாகவே டாக் ஆஃப் தி சிட்டியாக உள்ளார். காரணம் அவரது இரண்டாவது திருமணம். அதுவும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் அவர் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஜோய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரே புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு இணையவாசிகள் தாறுமாறாக கமெண்ட்களை அள்ளி வீச ஆவலாக இருந்தால், மாதம்பட்டி கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞராக மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாவதற்கு முன்னர் நடிகராக மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர். இணையம் நன்கு வளர்ந்த பிறகு அவர் சமையல் கலைஞர் என்பது பலருக்கும் தெரியவந்தது. சினிமா பிரபலங்கள், அரசியல் புள்ளிகள், பெரும் பணக்காரர்களின் வீட்டு விசேஷங்கள் பலவும் இவரது சமையலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். ஸ்ருதிக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த கிசுகிசுக்கள் தொடர்ந்து இருந்து வந்தது.
இரண்டாவது திருமணம்: அதற்கு ஏற்ற வகையில் கடந்த வாரத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜோய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இணையவாசிகளுக்கு ஷாக் கொடுத்தது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளாரே என்று எல்லாம் பலரும் கேள்வி எழுப்பினார்கள். முதல் மனைவி ஸ்ருதி புகார் அளித்தால் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஜெயில் தான் என்றும் பலரும் கூறி வந்தார்கள்.

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான நிலையத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அவர் இட்டுள்ள கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " கனவுகளால் நிரம்பிய பைகள், நெருப்பைக் கக்கும் கண்கள், சீர்குலைக்க முடியாத அமைதி. நம்ம மனநிலையை தடுக்க முடியாத போது பெரிய வேகத்தடைகள் கூட சிறிய அறிக்கைகள் போலத்தான் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
இணையவாசிகள் அட்டாக்: இவரது இந்த புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் பலரும், மாதம்பட்டி ரங்கராஜ் கமெண்ட் செக்ஷனை ஆன் செய்து வைத்துவிட்டு இந்த உருட்டுகள் எல்லாம் உருட்டுங்க என இணையத்தில் பேசி வருகிறார்கள். தைரியமாக கேப்ஷனிட்ட மாதப்பட்டி ரங்கராஜ், எதற்கு பயந்து கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார் என்று தெரியவில்லையே என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











