3 க்கு 6 வேளை நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டவங்களுக்குலாம் சிங்கப்பெண்ணே மியூசிக்கா? ரசிகர்கள் கலாய்!

சென்னை: ராஜுவுக்கு தாமரை வேலை பார்த்துக் கொடுக்கிறார் என பிரசாரம் பண்ணி வந்த பிரியங்கா தாமரை வெளியே போகும் போது தனக்கு தாமரை தான் தொடர்ந்து சமைத்துக் கொடுத்தார் என சொன்ன வாக்கு மூலத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க சமைக்காதது பற்றி இதுவரை பேசவே இல்லையே பிரியங்கா என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இன்றைய மூன்றாவது புரமோவில் கன்ஃபெஷன் ரூமில் பிரியங்காவிடம் மைக் கொடுத்த நிலையில், கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன் என அவர் சொன்னதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்காவை விட ஃபைனல்ஸ்க்கு வர பலருக்கு தகுதி இருந்தும் விஜய் டிவியின் தயவால் தான் அவர் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என ஏகப்பட்ட மீம்கள் பறந்து வருவதை பார்க்க முடிகிறது.

ராஜு வேலையே செய்யல

ராஜு வேலையே செய்யல

பாத்திரம் கழுவும் வேலையை மட்டுமே தான் செய்யவில்லை என ராஜுவே ஒப்புக் கொண்ட நிலையில், தொடர்ந்து அதை வைத்தே பிரியங்கா ராஜுவை டார்கெட் செய்து வந்தார். ஆனால், சமையல் செய்வதில் எல்லாம் ராஜு உதவியாக இருந்த ஏகப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சமைக்க மாட்டாரா?

பிரியங்கா சமைக்க மாட்டாரா?

அதே சமயம் பிரியங்கா இந்த பிக் பாஸ் வீட்டில் என்ன வேலை பார்த்தார் என்கிற கேள்வியை ராஜுவின் ஆர்மியினர் தற்போது கிளப்பி உள்ளனர். தாமரை எவிக்ட் ஆகி வெளியே போகும் போது கூட பிரியங்காவுக்கு யாராவது சமைச்சு போடுங்கப்பா என சொல்லி விட்டு சென்றார். பிரியங்காவும் தாமரை தான் தனக்கு சமைத்துக் கொடுத்தார் என்றும் கூறினார். அப்போ பிரியங்கா இதுவரை சமைக்கவே இல்லையா? என்றும் வெறும் சாப்பாட்டு ராமி எப்படி ராஜுவை இந்த விவகாரத்தை வைத்து டார்கெட் செய்யலாம் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

விஜய் டிவியால்

விஜய் டிவியால்

"உங்க உழைப்பால் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீங்க.... ஆனால் விஜய் டிவியால் தான் இறுதி போட்டிக்கு போய் இருக்கீங்க!!" என பிரியங்கா ஃபைனல் வந்ததே விஜய் டிவியால் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சுருதி, இமான் அண்ணாச்சி, வருண், சிபி, தாமரை உள்ளிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு வந்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பத்து வருட உழைப்பு

பத்து வருட உழைப்பு

கடந்த 10 ஆண்டுகளாக விஜய் டிவிக்காக கடும் உழைப்பை போட்டு ஒரு தூணாக இருக்கிறார் பிரியங்கா.. அவருக்கு சிங்கப்பெண்ணே பாடல் போட்டது சரியான ஒன்று தான் என பிரியங்காவின் ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ராஜு தான் வின்னர்

ராஜு தான் வின்னர்

கோல்டன் மைக்கை பிடித்துக் கொண்டு தனது பிரச்சாரத்தை தொடங்கி ஓட்டுக் கேட்ட பிரியங்காவின் புரமோவை பார்த்த ராஜுவின் ஆர்மியினர், "Sorry அதெல்லாம் முடியாது, நாங்க ராஜுவைத்தான் Win பண்ண வைப்போம்... BB5 Tittle Winner ராஜுதான்!" என கமெண்ட் போட்டு பிரியங்கா ஆர்மியினரை கதறவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 10h January 2022 - Promo 3 | மக்களிடம் Vote போட சொல்லி கேட்ட Priyanka
எதுக்கு சிங்கப்பெண்ணே பாட்டு

எதுக்கு சிங்கப்பெண்ணே பாட்டு

பிரியங்காவை கடைசி நேரத்தில் புரமோட் செய்யவே அவருக்கு சிங்கப்பெண்ணே பாடலை பிக் பாஸ் எடிட்டர் போட்டு வருகிறார் என்றும் "3 க்கு 6 வேளை நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டவங்களுக்குலாம் சிங்கப்பெண்ணே மியூசிக்கா யப்பா" என மீம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். வீட்டுக்குள் ராஜுவுக்கும் பிரியங்காவுக்கும் போட்டி நடக்குதோ இல்லையோ இந்த வாரம் சமூக வலைதளத்தில் ராஜு மற்றும் பிரியங்கா ஆர்மியிடையே கடும் சண்டை நடக்கும் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X