ரெண்டு பேரும் இங்கிலிஷ்ல கழுவி ஊத்திக்குறாங்களே.. பிக்பாஸ் புரமோவை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அக்ஷராவையும் பிரியங்காவையும் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அக்ஷரா, டாஸ்க்கிற்காக ராஜுவிடம் சண்டையிடுகிறார். அப்போது பிரியங்கா தலையிட அவரிடமும் எகிறுகிறார் அக்ஷரா.
இதனால் பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டோட ஓனர்
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா அக்ஷராவிடம் என்கிட்ட போ, வான்னுலாம் பேசாத என கூறுவதை குறிப்பிட்டு, ஆமா, வாங்க மேடம் போங்க மேடம் னு எல்லாரும் பேசுங்க பா. ஏனா இவங்க யாரு தெரியுமா? இவுங்க தான் இந்த பிக்பாஸ் வீட்டோட ஓனரு. அப்போ இனி அக்ஷராதான் இந்த பிரியங்காவுக்கு டார்கெட் என விளாசியுள்ளார்.

ஓவர் சீன் அக்ஷரா
இன்றைய இரண்டாவது புரமோவில் அக்ஷரா ராஜுவிடம் கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், ராஜு பிரதரோட ஒரு துளி கூட உன்னை ஒப்பிட முடியாது... இதுல வேற ஓவர் சீன் அக்ஷரா ரெட்டி என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

பிரியங்காவின் முக்கிய வேலை
இன்றைய இரண்டாவது புரமோவில் பிரியங்கா, அக்ஷரா ரெட்டியின் பிரச்சனையில் தலையிடுவதை பார்த்த இந்த நெட்டிசன், மற்றவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதுதான் அந்த வீட்டில் பிரியங்காவின் முக்கிய வேலை என குறிப்பிட்டுள்ளார்.

காணத் தவறாதீர்கள்..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எதிர்பார்த்த மாதிரி மூன்றாவது புரமோவில் அக்ஷரா மிருதங்க உடைப்பும் வருணின் பரதநாட்டியத்தையும் காண தவறாதீர்கள்.. என பதிவிட்டு இருவரையும் கலாய்த்துள்ளார்.

எபிசோட் பார்ப்போம்
இன்றைய இரண்டாவது புரமோவில் அக்ஷராவும் பிரியங்காவும் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த இந்த நெட்டிசன், அசராத அக்க்ஷரா, பின்றாங்க பிரியங்கா. இரண்டு பேருக்கும் சேர்த்து பதிவிடலாம். எபிசோட் பார்த்த பிறகு சஞ்சய் மாதிரி யாரு பக்கம் சரியோ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணலாம் என பதிவிட்டுள்ளார்.

ஒரு குரூப் கம்பு சுத்தும்
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை கிராமத்தில இருந்து வந்து கத்துகிறார். நாங்களும் கிராமத்தில இருந்து வர்ரோம் இப்படி எல்லாம் யாரும் கத்த மாட்டங்கனு ஒரு கும்பல் கதறுச்சி.. இன்னைக்கு இந்த நகரவாசிகள் ரெண்டுமே இங்கிலீஷ்ல கழுவி ஊத்துதுங்க.. இதுக்கு என்ன சொல்லி ஒரு குரூப் கம்பு சுத்தும் பார்க்கலாம்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











