twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகுமார் அய்யா எவ்ளோ நல்ல மனுஷன் ஆனா அவர் பொண்ணு ரொம்ப மோசம்! கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகுனி போல செயல்பட்டுவரும் வனிதாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே இரண்டு கணவர்களை விவகாரத்து செய்த இவர், அண்மையில் நடன இயக்குநர் ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் வனிதா. எல்லோரையும் கத்தி கத்தி டாமினேட் செய்யும் வனிதா, ஒருவர் குறித்து ஒருவரிடம் பற்ற வைத்து பிக்பாஸ் வீட்டை ரணகளமாக்கிவிட்டார்.

    காத்திருக்கும் மக்கள்

    காத்திருக்கும் மக்கள்

    வனிதாதான் பிரச்சனையை கிரியேட் செய்கிறார் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது. எப்போது வனிதாவின் பெயர் எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிருக்கின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

    தனியா போராடும் போது

    நீங்கலாம் எதையுமே கண்டுக்க மாட்டீங்க உங்க நோக்கம் வெற்றி மட்டுமே. ஒரு பொண்ணு தனியா போராடும் போது சப்போர்ட் பண்ணனும்னு கூட தோனலையாடா

    ஆத்தாடி ஆத்தா

    அழிந்து வரும் தமிழர் கலாச்சாரமான குழாயடி சண்டையை மீட்டு கொண்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்து , நீங்கள் பச்சை தமிழர் தான் என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
    ஆத்தாடி ஆத்தா.. என்கிறார் இவர்.

    வனிதா-மது சண்டை

    ஒன்னு கவனிச்சிங்களா பிக்பாஸ் ஒன்னுல நடந்த காயத்ரி - ஆர்த்தி சண்டை வனிதா-மது சண்டை மாதிரியே இருக்கும். என்கிறார் இவர்.

    ரொம்ப மோசம்

    விஜயகுமார் அய்யா எவ்ளோ நல்ல மனுஷன் ஆனா அவர் பொண்ணு ரொம்ப மோசம். என்று கூறுகிறார் இவர்.

    சரியாத்தான் பேசுறேனா

    நான் சரியாத்தான் பேசுறேன்னு சொன்னா அது வனிதா விஜயகுமார். நான் சரியாத்தான் பேசுறேனான்னு கேட்டா அது மதுமிதா. என்கிறார் இந்த நெட்டிசன்.

    நல்லாவே காட்டிட்டாங்க

    வந்தாரை வாழ வைத்த அந்த பெருந்தன்மை #தமிழன் #தமிழ்நாட்டில் படும்பாடு எப்படி என்பதை #மதுமிதாவை எல்லோரும் சேர்ந்து கார்னர் பண்ணி நல்லாவே காட்டிட்டாய்ங்க.. என்று கூறுகிறார் இவர்.

    வேட்டையாட துடிக்கிறது

    மதுமிதா, மீராமிதுன் என்ற இரு ஆடுகளை வனிதா, ரேஷ்மா, ஷெரின், கவின், சாக்ஷி, அபிராமி என்ற ஓநாய் கூட்டம் வேட்டையாட துடிக்கிறது. தலைவர் கமல்ஹாசன் காப்பாத்துவாரா பார்ப்போம். என்கிறார் இவர்.

    ஐயோ முடியல

    மொதல்ல இந்த #வனிதாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் பிக் பாஸ் வீடு நிம்மதியா இருக்கும் ஐயோ முடியல.. என்கிறார் இந்த நெட்டிசன்.

    ஓவர் ஆக்ஷன

    ஓவர் டாமினேஷன், இன்டரப்ஷன், ஓவர் ஆக்‌ஷன்.. என்கிறார் இவர்.

    உன் கஷ்டம்

    தம்பி அருண்விஜய், இப்போ புரியுதுப்பா உன் கஷ்டம்

    போலீஸ்ல இருந்து தப்பிக்க

    பிக்பாஸ்ல இந்த #வனிதா போட்டிக்கு வந்தமாதிரி தெரியல...போலீஸ்ல இருந்து தப்பிக்க உள்ள வந்த மாதிரி தெரியுது... என்கிறார் இவர்.

    English summary
    Netizens slams problem creator Vanitha Vijayakumar in the biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X