Kanguva: டேமேஜ் ஆன கங்குவா.. ஆத்திரத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெயன்.. ரவுண்ட் கட்டிய நெட்டிசன்கள்!

சென்னை: கங்குவா படம் ரிலீஸ் ஆனதும்தான் ஆனது, ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் விமர்சனத்தை நாள்தோறும் எதிர்கொண்டு வருகின்றது. படம் பார்த்தவர்கள்தான், விளாசித் தள்ளுகின்றார்களே, நாம் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம் என இல்லாமல், படக்குழுவினர், ஒருவர் பின் ஒருவராக வாய்விட்டு, எதாவது பேசி, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கின்றார்கள். கங்குவா படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறவேண்டிய படம். ஆனால், அந்தப் படத்தினை விமர்சகர்களின் தவறான விமர்சனங்களால் படம் வசூலில் பெரிய அடி வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் படக்குழு தரப்பில் முன் வைக்கப்படுகின்றது. இப்படியான நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தனஞ்ஜெயன் தனது எக்ஸ் பக்க போஸ்ட்டினால் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.

சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. படத்தில் தீஷா பதானி, பாபி தியோல், கார்த்தி, கருணாஸ், கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

kanguva suriya

தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் இந்தப் படம் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து ரசிகர்கள் விமர்சகர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்த்தனர். படம் இந்தியா முழுவதும் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், மாஸ் ஓப்பனிங்கும் இருந்தது. ஆனால் படம் பார்த்த சூர்யா ரசிகர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை பலரும் படத்தினை கடுமையாக விமர்சித்தனர்.

வசூல்: குறிப்பாக படத்தின் பின்னணி இசை பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இதுமட்டும் இல்லாமல், சூர்யாவின் ரசிகர்களே ஒட்டுமொத்த படக்குழுவினரைத் திட்டித்தீர்த்தனர். பெரும் ஏமாற்றத்தில் அவர்கள் இருக்க, படம் பார்த்த ஜென்ரல் ஆடியன்ஸ் படத்தின் ஓட்டை உடைசல்களை கண்டுபிடித்துக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இது படத்தின் வசூலை பெருமளவில் பாதித்தது. இதனை படக்குழுவினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தனஞ்ஜெயன்: இப்படியான நிலையில் படத்திற்கு ஆதரவாகவும், படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்த விமர்சகர்களுக்கு எதிராகவும், நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், இது ஜோதிகாவுக்குத்தான் பேக் ஃபையராக மாறியது. அதாவது, ரசிகர்களும் விமர்சகர்களும் ஜோதிகாவின் கருத்தினை கடுமையாக விளாச ஆரம்பித்தனர். இவையெல்லாம் இப்போதுதான் கொஞ்சம் அடங்கிய நிலையில், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தினை ஈர்த்தது.

kanguva suriya

கோபம்: அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " திரைப்படங்களை தங்களது தவறான விமர்சனங்கள் மூலம் கொலை செய்யக்கூடிய, வெறுப்பை மட்டுமே பரப்பக்கூடிய முட்டாள்கள்அடங்கிய பட்டியலை நாங்கள் தயார் செய்துள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு இணையவாசி ஒருவர், சார் இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என கமெண்ட் செய்தார். அதற்கு தனஞ்ஜெயன், 'நீ வெறுப்பை பரப்புவ.. நான் மட்டும் அமைதியா பதில் சொல்லனுமா? ' என கேள்வி எழுப்பியுள்ளார். தனஞ்ஜெயனின் இந்த போஸ்ட்டுக்கு நெட்டிசன்கள் அவரை ரவுண்டு கட்டி வருகின்றார்கள். அதேபோல் மற்றொரு இணையவாசி, விட்டுத்தள்ளுங்கள் சார், இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள் எனக் கூறினார். இதற்கு தனஞ்ஜெயன் ஆங்கிலத்தில் அக்ரீட் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X