Allu Arjun: உயிர் போச்சே! அல்லு அர்ஜுனுக்கு பப்ளிசிட்டி போதை.. கண்டபடி விமர்சிக்கும் இணையவாசிகள்
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், ஆகியோரது நடிப்பில் இன்று அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்தினை சுகுமாறன் இயக்கினார். படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார். அதேபோல், படத்தின் பின்னணி இசையை, தமன் மற்றும் சாம் சி.எஸ் அமைத்துள்ளனர். படம் உலகம் முழுவதும் சுமார் 12,500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள், படம் குறித்து தங்களது கருத்தினை மிகவும் ஆர்வத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தியேட்டரில் ரசிகர்கள் அதிகாலையில் படம் பார்க்க குவிந்தனர். அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க வந்தார் அல்லு அர்ஜுன். இதனால் அல்லு அர்ஜுனை அருகில் பார்ப்பதற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இரண்டு மகன்களுடன் வந்த தாய் உயிரிழந்தார். மேலும் அவரது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் உள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரது மரணத்திற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என இணையவாசிகள் அல்லு அர்ஜுனை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

பொதுவாக திரையுலகில் இருக்கும் பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால், அவரின் ரசிகர்களுக்கு படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடவேண்டும் என்ற மனநிலைக்கு ரசிகர்களாகவே தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் ரசிகர்களின் இந்த மனநிலையில் பல திரையரங்க உரிமையாளர்கள், பணமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வாங்கி, படத்தினை திரையிடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல், இந்த சிறப்புக் காட்சிகளுக்கு அரசிடம் ஒப்புதல் பெற்று, அதிக விலையிலும் டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.
கொள்ளை: இதில் அரசு நிர்ணயித்ததைவிடவும் அதிக தொகைக்கு கள்ளச்சந்தையில், பட டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் நபர்களும், அவர்களிடம் பல ஆயிரங்கள் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படி ஹைதராபாத்தில் எப்போதும் நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகள் மட்டும் இல்லை. இதுதான் வித்தியாசம்.

அனுபவம்: இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒரு நடிகருக்கு தான் நடித்த படத்தினை ரசிகர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றார்கள், ரசிக்கின்றார்கள், கொண்டாடுகின்றார்கள் எனத் தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் இருக்கும். இதில் தவறு எதுவும் இல்லை. மேலும் ஒரு தொழில்முறை நடிகருக்கு இதுபோன்ற அனுபவங்கள் அவரை மெருகேற்றிக் கொள்ளவும் உதவும். அதேநேரத்தில் ஒரு நடிகர், தான் நேரடியாக தியேட்டருக்குச் சென்றால், ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்ப்பரிப்பார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

யோசனை: குறிப்பாக தன்னைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள், இதனால், அவர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படும் என்று யோசிக்க வேண்டியது நடிகரின் பொறுப்பு. பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்கள், ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்ற பின்னர் தியேட்டருக்குச் சென்றால், ரசிகர்களுக்கு இடையில் ஏற்படும் தள்ளு முள்ளுவைத் தவிர்க்கலாம்.

தாய் பலி: ஆனால் அல்லு அர்ஜுன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ஹைதராபாத்தில் உள்ள, சந்தியா தியேட்டரில் படம் பார்க்க தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டு இருக்கும்போது சென்றார். இதுமட்டும் இல்லாமல், காரில் இருந்துகொண்டு ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். இவரைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் ரசிகர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒரு பெண் ரசிகை உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்திருந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்: இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் தான் முழுக்காரணம் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அல்லு அர்ஜுன் ஏன் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கும்போது செல்ல வேண்டும்? அவருக்கு பப்ளிசிட்டி போதை என்பதால்தான் அவர் இப்படிச் செய்துள்ளார். இறந்துபோன தாயை, அல்லு அர்ஜுன் மீட்டுக் கொண்டுவருவாரா? அவரது பப்ளிசிட்டி போதை ஒரு உயிரை பரிதாபமாக காவு வாங்கிவிட்டது" என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











