Coolie: ஒரு உயிர் போயும் திருந்தல.. ரசிகர்களின் ஆர்வக்கோளாறை ஃபையர் விட்டா கொண்டாடுவீங்க.. ரொம்ப தப்பு!

திருச்சூர்: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படமான கூலி. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் இன்னும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புக்கிங் தொடங்கவில்லை. இப்படி இருக்கும்போது, கேரளாவில் புக்கிங் தொடங்கிவிட்டது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் திருச்சூரில் உள்ள தியேட்டரில் போட்டி போட்டு வாங்க கும்பலாக ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கதில் பகிர்ந்து, " Massive fan craze storms theatres for just the advance booking of Coolie in Thrissur, Kerala! " என ஆங்கிலத்தில் கேப்ஷன் இட்டுள்ளது. ரசிகர்களின் செயல் ஆர்வக்கோளாறு என்றால், இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஃபையர் விட்டுள்ள சன் பிக்சர்ஸின் செயல் பொறுப்பற்றதாக உள்ளது.

Netizens Slams Rajinikanth Coolie Pre Booking Starts At Kerala Sun Pictures Glorify Fans Madness

புஷ்பா 2: கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவில் இப்படித்தான், ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு கட்டுக்கடங்காத கூட்டத்தில் ரேவதி என்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பம் நடைபெற இன்னொரு காரணம் படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்ததும்தான். காவல்துறைக்கு அறிவிக்காமல் அவர் படம் பார்க்க வந்ததும் ரேவதி என்ற ரசிகை மரணமடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இணையவாசிகள்: "இது போல நம் கண் முன்னே பல உதாரணங்கள் உள்ளது. அதில் இருந்து கற்ற படிப்பினைகள் எல்லாம் எங்கே போனது? சன் பிக்சர்ஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமே இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போலவும், ரசிகர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் ரசிகர்கள் இவ்வாறு முண்டியடித்துக் கொண்டு ஓடுவது என்பது, தவறு என சுட்டிக் காட்டாமல் இருப்பதும் ஏமாற்றமே. ரசிகர்களின் இந்த ஆர்வக்கோளாறான செயலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வியாபார வெற்றியாக பார்ப்பது என்பதும் மாற்றிக் கொள்ள வேண்டிய செயல். மேலும் இது கண்டனத்துக்குரியதும் கூட" என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X