twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத உணர்வுகளை சீண்டும் வகையில் பேசுகிறாரா ராஜு... கண்டபடி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் டைட்டில் வின்னர் ராஜு தான் என்றும், ராஜு மற்றும் பிரியங்கா தான் பைனல் வரை போவார்கள் என இதுவரை சோஷியல்ச மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்று நிரூப்பே அதை ஓப்பனாக வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையில் சொல்லி விட்டார்.

    அமீர் ஏற்கனவே ஃபைனலுக்கு போய் விட்டார். ராஜு, பிரியங்கா ஃபைனலுக்கு போவார்கள் என்று தெரிந்தாலும் நானும் ஃபைனல் வரை போக முயற்சி செய்வேன் என பிடிவாதமாக பேசி வருகிறார் நிரூப். தான் எப்படியும் ஃபைனலுக்கு போய் விடுவோம் என்ற நம்பிக்கையில் ஆரம்ப முதலே இருந்து வரும் ராஜு, கமல் கண்டித்ததால் நேற்று நாமினேஷனின் போது யார் பேசினாலும் குறுக்கே பேசினார்.

    பெட்டி வருவதற்கு முன் நான் எடுக்க மாட்டேன்.. பெட்டி வந்ததும் நான் எடுத்துருவேன்.. என்னங்க நிரூப்?பெட்டி வருவதற்கு முன் நான் எடுக்க மாட்டேன்.. பெட்டி வந்ததும் நான் எடுத்துருவேன்.. என்னங்க நிரூப்?

    வாய் திறக்காத ராஜு

    வாய் திறக்காத ராஜு

    90 நாட்களாக எந்த சண்டையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்ததுடன், தானும் எந்த பிரச்சனையும் சண்டையும் இல்லாமல் இருந்து வந்த ராஜு இப்போது பேசி வருவதை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் புதிய சிக்கல் ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ராஜு. கடந்த வாரம் அவர் நடந்து கொண்டதை வைத்து நெட்டிசன்கள் கண்டபடி அவரை விமர்சித்து வருகிறார்கள்.

    மத உணர்வுகளை சீண்டினாரா

    மத உணர்வுகளை சீண்டினாரா

    கடந்த வாரத்தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கிற்காக அனைவரும் தயாராகி காத்திருந்த போது, வீட்டில் உள்ள போட்டியாளர்களை வழக்கம் போல் கலாய்த்துக் கொண்டிருந்தார் ராஜு. ஆனால் கிறிஸ்தவ மத போதகர்கள் பேசும் அதே தோரணையில், அதே குரலில் போட்டியாளர்களை கலாய்த்தார். இதற்கு சக போட்டியாளர்களோ, வார இறுதியில் கமலோ எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

    இந்த கேள்வி எதற்கு

    இந்த கேள்வி எதற்கு

    அதோடு மட்டுமில்லாமல் நேற்றை எபிசோடில் நாமினேஷனிற்காக சிபி மற்றும் நிரூப் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ராஜு மட்டும் குறுக்கிட்டு, சம்பந்தமே இல்லாமல், நிரூப் உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா என்றார். அவர் எதற்காக அப்படி கேட்டார் என நிரூப் மட்டுமல்ல, அதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கும் புரியவில்லை.

    எதற்காக இதை கேட்டாரா ராஜு

    எதற்காக இதை கேட்டாரா ராஜு

    இருந்தாலும், தனக்கு அதில் நம்பிக்கை கிடையாது என்றார் நிரூப். ராஜுவும் எல்லோரும் சாமி கும்பிடுகிறார்களே நீயும் கும்பிட வேண்டியது தானே என்றார். நிரூப்பும் எல்லோரும் செய்தால் நானும் எதற்காக அதை செய்ய வேண்டும் என வாதம் செய்தார்கள். ஆனால் எதற்காக சாமி கும்பிடுவதை உதாரணமாக வைத்து ராஜு பேசினார் என தெரியவில்லை.

    Recommended Video

    Bigg Boss விட்டு Amir வந்து என்ன சொல்லுவானோ? பீதியில் இருக்கேன் Shyji Post, Alhena, Aishwarya
    கடுப்பாகி திட்டும் நெட்டிசன்கள்

    கடுப்பாகி திட்டும் நெட்டிசன்கள்

    மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ராஜு பேசியதற்காக அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன் ஆரம்பத்தில் அபிஷேக்கும் தாமரை பட்டை அடிப்பதை கிண்டல் செய்யும் வகையில், பட்டையை போட்டு ஊரை ஏமாற்றுகிறாய் என்றார். இதற்கு அப்போதே கோபப்பட்டு, அப்படி பேச வேண்டாம் என கண்டித்து தடுத்தார் தாமரை. ஆனால் ராஜு எப்படியும் தான் டைட்டிலை வெல்ல போகிறோம் என்ற தைரியத்தில் இவ்வாறு பேசி வருவதாக நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.

    English summary
    Last week Raju spoke against religious sentiments. Yesterday episode also he asked question for niroop like that. netizens slam raju's attitude. They questioned that would he bacome the title winner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X