கோழிகள் கொத்திக் கொண்டால்.. குள்ளநரிக்கு கொண்டாட்டம்தான்.. ரம்யா பாண்டியனை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மூன்றாவது புரமோவில் பாலாவை ஆரி கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்த ரம்யா பாண்டியன், இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று பேசியதை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் கலக்கலாக நடைபெற்று வருகிறது.

ஷிவானி அம்மா, பாலாவின் அண்ணன், ரம்யாவின் குடும்பத்தினர் மற்றும் ரியோவின் மனைவி உள்ளிட்டோர் இதுவரை ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்துள்ளனர்.

விஷ பாட்டில் ரம்யா

விஷ பாட்டில் ரம்யா

"விஷபாட்டில் ரம்யா உன் அம்மா தம்பி என்ன சொன்னார்கள்... அவங்க பேச்சை கேட்க மாட்டார் போல.... இனிமேல் சிரிக்கும் போது எதிரில் உள்ளவங்க கிட்ட சொல்லிட்டு சிரிம்மா!!!!" என இந்த நெட்டிசன் மூன்றாவது புரமோவை பார்த்த பிறகு திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஃபிரேம் பண்ணி வைங்கப்பா

ஃபிரேம் பண்ணி வைங்கப்பா

"Frame பண்ணி வைங்கப்பா இந்த போட்டோவ, மூணு வாரத்தில யாரு எங்க இருப்பாங்களோ!" என இந்த பிக் பாஸ் ரசிகை பாலாவும் ஆரியும் கொஞ்சிக் கொண்டு இருக்கும் க்யூட் போட்டோவை பார்த்து கண் வைத்துள்ளார்கள். இந்த சீசனிலேயே இது தான் க்யூட்டான தருணம் என்றும் கூறி வருகின்றனர்.

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு

விஷப் பூச்சி ரம்யா மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓப்பனா பேசுறாங்க என்றும், நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளியே பேசிட்டு இருக்கீங்க, தாய்க்கிழவி தயவு செஞ்சு அப்படி சிரிக்காதீங்க என்றும் ரம்யா பாண்டியனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். எதுக்கு இந்த வீண் வேலை என்றும் விளாசி வருகின்றனர்.

குள்ளநரிக்கு கொண்டாட்டம் தான்

குள்ளநரிக்கு கொண்டாட்டம் தான்

"கோழிகள் கொத்திகொண்டால் குள்ளநரிக்கு கொண்டாட்டம்தான்!.." என ரம்யாவுக்கு ரொம்பவே பிடித்த குள்ளநரி பட்டத்தை ரசிகர்கள் தொடர்ந்து சூட்டி அவரை கலாய்த்து வருகின்றனர். வெளியே வந்ததும் ஏன் தான் அப்படி சொன்னோம்னு அவரே ரொம்ப ஃபீல் பண்ணுவாரு என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். ரம்யாவும் சும்மா ஜாலிக்குத்தான் பேசுனாங்க, ஓவரா ஓட்ட வேண்டாம் என ரம்யா ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X