For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாவை விட மோசமா டபுள் கேம் ஆடுறாங்க ரம்யா.. நரி முகம் அப்பட்டமா தெரியுது.. விளாசும் ரசிகர்கள்!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸை விட மோசமா டபுள் கேம் ஆடுறாங்க ரம்யா பாண்டியன் என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

  ரம்யாவின் தம்பி இந்த வாரம் ரம்யா வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும், ஆரி தான் என் தலைவன் என்று பேசியதும், ரம்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

  'நம்ம செவனாண்டி பெத்த பொண்ணா இது? ஆச்சரியமா இருக்கே..' ஊதா கலரு ரிப்பனை அப்படி வியக்கும் ரசிகர்கள்

  பாலா, ரம்யா மற்றும் ரியோ மூன்று பேரும் ஆரியை இப்படி கார்னர் பண்ணாம இருந்தாலே அவங்களுக்கு டைட்டில் கிடைக்கும். ஏன் இவ்ளோ பயம் என்பதே ரசிகர்களின் கேள்வி.

  வேஸ்டட் மொமென்ட்

  வேஸ்டட் மொமென்ட்

  ஆரி தான் என் தலைவன் என ரம்யா பாண்டியனின் தம்பி, துபாயில் இருந்து சென்னை வந்து குவாரண்டைனில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் பார்க்க நினைத்ததே ரம்யாவை இல்லை ஆரியை தான் என்பதை புரிந்து கொண்ட ரம்யாவுக்கு அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. ரம்யாவுக்கு அது சரியான வேஸ்டட் மொமென்ட்டாகவே மாறியது.

  பாலா பேசும் போது

  பாலா பேசும் போது

  வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் நாமினேஷனின் போது ஆரி பாலாவை நாமினேட் செய்தார். அப்போது, ஒரு நொடி கூட அவரை பேச விடாமல் அட்டகாசம் பண்ணி கத்திய பாலாவை ரம்யா ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. பாலா பதிலுக்கு ஆரியை நாமினேட் செய்து பேசி முடித்தவுடன் வாய் திறந்த ஆரியை நீங்க மட்டும் பேசலாமா? என ரம்யா பேசியதில் இருந்தே அவரது நரி முகம் வெளியே தெரியத் தொடங்கிவிட்டது.

  மேட்னி ஷோ வேணும்

  மேட்னி ஷோ வேணும்

  மேலும், நாமினேஷன் முடித்து ஜெயிலுக்குள் ஆரி செல்லும் போது, மேட்னி ஷோ வேண்டும் என ரம்யா சிரித்துக் கொண்டே ஆரிக்கு ஏற்ற ஊசியின் விளைவாகத் தான் ஆரி ரியோவை அழைத்து வைத்து விவாதம் செய்தார். ஆனால், பாலா கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆரியை காலி பண்ணி டெஷன் ஆக்கி அடிக்க வைத்து விட வேண்டும் என பிரச்சனையை பெரிது படுத்தினார். ஆரம்பித்து வைத்தது குள்ள நரி ரம்யா தான் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

  வைரலாகும் அன்சீன்

  எல்லா குடும்பங்களும் ஆரியை பாராட்டியது ரம்யாவுக்கும் பாலாவுக்கும் பிடிக்கவே இல்லை. இருவரும் பேசிக் கொண்ட அன்சீன் ஒன்று வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் அங்கு வந்த ரியோவும், வந்த எல்லோரும் பாராட்டிய ஒரே ஆள் ஆரி தான் என்று தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

  சிங்கிள் சிங்கம்

  சிங்கிள் சிங்கம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ஆரி எந்த இடத்திலும் பாலாவை திட்டவில்லை. ஆனால், பதிலுக்கு பாலா பேக்கு என்றும் முட்டாள் என்றும் ஆரியை நேற்று திட்டியதற்கும் அவர் கூலாக ஆமாம், நான் அது தான் நீ பேசுப்பா எவ்ளோ பேச முடியுதோ அவ்ளோ பேசு என சிங்கிள் சிங்கமாக ஒட்டுமொத்த நரிக்கூட்டத்தையும் சமாளித்து வருகிறார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  அதிரடி வெளியேற்றம்

  அதிரடி வெளியேற்றம்

  டுபாக்கூர், அட்ஜெஸ்ட்மென்ட், மைக் மாட்டுவதில்லை, ஷிவானியுடன் ஃபேக் காதல், ஆஜீத்தை அல்லக்கையாக பயன்படுத்திக் கொண்டது, ஆரியுடன் சண்டை என இந்த சீசன் முழுவதும் பாலாஜி முருகதாஸ் பண்ணிய அட்டகாசத்துக்கு அவர் இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட வேண்டும் என ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

  கேடி ரம்யா

  கேடி ரம்யா

  ஆரி, பாலா மற்றும் ரியோ ஆகிய மூவரும் சண்டை போட்டுக் கொண்டால், சைலன்ட்டா நாம டைட்டில் வின்னர் ஆகிவிடலாம் என மாஸ்டர் பிளான் போட்டு விளையாடி வருகிறார் ரம்யா பாண்டியன் என்றும், நிச்சயம் அவருக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது அதற்கு அவர் வொர்த் இல்லை என்றும் விளாசி தள்ளுகின்றனர். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

  English summary
  Netizens slams Ramya Pandian for her double stranded game against Aari. She also plan to win the title and enjoys others fight.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X