காளி தேவி சிலுவையை நக்குவது போல படமாக்குவதா?.. யாஸ்மின் மோகன்ராஜை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

சென்னை: ராப் இசைக்கலைஞரான யாஸ்மின் மோகன்ராஜ் காளி தேவி போல வேடமிட்டுக் கொண்டு சிலுவையை நக்குவது போல பாடல் வீடியோ ஒன்றில் நடித்துள்ள நிலையில், இணையவாசிகள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். இதற்கு பெயர் படைப்பு சுதந்திரம் இல்லை என்றும் இது இரண்டு மதங்களை நேரடியாக இழிவுப்படுத்தும் செயல் என விளாசியுள்ளனர்.

Tommy Genesis எனும் பெயரில் வலம் வரும் கனடா ராப்பர் யாஸ்மின் மோகன்ராஜ் கேரளாவை பூர்விகமாக கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சமீப காலமாக கேரளவில் அடுத்தடுத்து ராப்பர்கள் கவனம் பெறத் தொடங்கி வரும் நிலையில், இப்படியொரு வைரல் யுக்தியை யாஸ்மின் மோகன்ராஜ் கையாண்டுள்ளார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

Netizens Slams Rapper Genesis Yasmine Mohanraj For Dressing As Goddess Kali Licking Crucifix
Photo Credit:

இவருக்கு மன்னிப்பெல்லாம் தரக்கூடாது என சீக்கிரமே பிடித்து சிறையில் கடுமையான தண்டனையுடன் தள்ள வேண்டும் என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் இவரது பாடல் வீடியோவை ஷேர் செய்து கெட்ட வார்த்தைகளில் இவரது செயலை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சர்ச்சையை கிளப்பிய ட்ரூ ப்ளூ: கனடா ராப்பரான டாமி ஜீனிசிஸ் எனும் யாஸ்மின் மோகன்ராஜ் தனது உடல் முழுவதும் காளி தேவி போல நீல நிறத்தில் வேடமிட்டுக் கொண்டு தங்க நகைகளை அணிந்துக் கொண்டு, பிகினி உடையுடன் பாடல் ஒன்றை பாடும் வீடியோவை True Blue எனும் தலைப்பில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இதெல்லாம் தேவையற்ற வேலை என்றும் இரு மதங்களை அவர் இழிவுப்படுத்துவதை எல்லாம் கொஞ்சம் கூட ஏற்க முடியாது என அடி வெளுத்து வருகின்றனர்.

சிலுவையை நக்கும் காளி: மேலும், அந்த வீடியோவில் மதங்களுக்கு இடையே மோதல்களை தூண்டும் விதமாக சிலுவையை கையில் வைத்துக் கொண்டு அதனை தனது நீண்ட நாக்கால் நக்குவது போன்ற வீடியோ காட்சிகள் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் உடனடியாக இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் ராப்பர் பாடகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை அடுக்கி உள்ளனர்.

குவியும் கண்டனங்கள்: இன்னும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் எப்படி டெலிட் செய்யாமல் இருக்கிறது என்பதே ஆச்சர்யமாக உள்ளது என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மேலும், சமீப காலமாக ராப் இசை பாடகர்கள் என்கிற போர்வையில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவர்கள் மட்டுமே வைரலாகின்றனர் என்றும் இதெல்லாம் உண்மையான திறமை கிடையாது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X