இந்த எண்ணமும் தெளிவும் இருக்கே.. யாரு வம்பிழுத்தாலும் சமாளிப்பாரு.. ஆரியை பாராட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ஆரியின் தெளிவையும் பொறுமையையும் பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரியை கெட்டவராக காட்ட முயற்சி செய்து மொக்கை வாங்கினார் ரியோ .
ஆரி கேபியிடம் பதில் சொன்ன போதும் சொல்லாததை போல் பேசினார் ரியோ. அதற்கு ஆரி பதில் சொன்னதும் என்னிடம் நீங்கள் அப்படி ரியாக்ட் செய்திருக்க கூடாது என்றும் நியாயம் பேசினார்.

முகம் முழுக்கவுமே..
எல்லோரும் ஒரு முடிவோடு இருப்பதை அறிந்த ஆரி, நான்தான் சாரி புரோ என்று வம்புக்கு இடம் கொடுக்காமல் செல்கிறார். ஆரியின் முகம் முழுக்கவுமே வாடிப் போயிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆரியின் தெளிவை பாராட்டி வருகின்றனர்.

டார்ச்சர் பண்றாங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லோரும் சேர்ந்து ஆரிக்கு நெருக்கடி கொடுத்து கார்னர் செய்தால்.. ஒருவித மன அழுத்தத்தால்.. கதவை திறந்ததும் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார் என்று விஜய் டிவி நினைத்திருக்கும் போல.. அதுக்காக தான் இவ்வளவு டார்ச்சர் பண்ணுகிறார்கள்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரிக்கு மட்டுமே..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லாரும் கூட்டு சேர்ந்து திரும்பவும் ஆரிய டார்கெட் செய்யஆரம்பிச்சாச்சா? நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா, பாவம் ஆரி புரோ எவ்வளவு தான்யா அவரும் பொறுமையா இருப்பாரு நீங்க எல்லாரும் சேர்ந்து எவ்வளவு தான் ஆரியை கெட்டவனா காண்பிக்க நினைத்தாலும் எங்கள் ஓட்டு ஆரிக்கு மட்டுமே.. என பதிவிட்டுள்ளார்.

மனநிலை புரியாமல்
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க ஏதோ ஓவர் சந்தோசத்துல இருக்கீங்க.. ஆரி ஏதோ ஸ்ட்ரெஸ்ல இருக்காருனு நல்லா தெரியுது.. மகிழ்ச்சிய திணிக்க முடியாது! அடுத்தவங்க மனநிலை புரியாமல் என்னத்த ஃபன் பண்றீங்க? என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

தாக்கு புடிக்க மாட்ட
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடே இவனே பத்து பேர் உள்ள ஒன்னா இருந்து வேணும்னே உன்ன ஒதுக்கி வைச்சா உனக்கு புரியும் அதோட வலி. உனக்கு அப்பிடி நடந்தா ஒரு நிமிசம் கூட தாக்கு புடிக்க மாட்ட. வந்துட்டான் நிலமை புரியாம என பதிவிட்டுள்ளார்.

போ ஓரமாய் உட்காரு
ரியோ ஆரியிடம் மல்லுக்கட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், டேய் குட்டி சினேகன் ரியோ அதுதான் இறுதி போட்டிக்கு போய்ட்டல.. எதுக்கு இந்த பில்டப்.. போ ஓரமாய் உட்காரு.. என பதிவிட்டுள்ளார்.

நாங்க நம்பிட்டோம்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமாம் ஆரி கெட்டவர் தான் நாங்க நம்பிட்டோம் அப்புறம்? ஆரி மட்டும் இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் பார்வையாளர் குறைவால் பரிதவித்த உங்களுக்கு அதிக தொகையை கொடுத்து இருக்கிறார் அள்ளி எடுத்து கொள்ளுங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.

யாரு வம்பிழுத்தாலும் சமாளிப்பாரு..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அவ்ளோ தான் ஆரி.. இந்த எண்ணமும் தெளிவும் இருக்கே!
யாரு என்ன வம்பிழுத்தாலும் சமாளிப்பாரு! என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











