அந்த காண்டுல தான் ரியோ இப்படி குதிக்கிறார்.. முதல் புரமோவை பார்த்து டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரியோ, ஆரியிடம் எகிறியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஏற்படும் வாக்குவாதத்தில் ரியோ ஆரியிடம் மல்லுக்கு நிற்கிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே அவருக்கு எதிராய் இருந்து வருவதாக கூறி வரும் நெட்டிசன்கள் ரியோவை கழுவி ஊற்றியுள்ளனர்.

வாய் சண்டை டாஸ்க்தான்
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் பிக் பாஸ் ஹெவி பிஸிக்கல் டாஸ்க் எப்போ தான் வைப்பீங்க????
இப்போ பிக் பாஸ் வீட்டில் வாய் சண்டை டாஸ்க் தான் நடக்குது! என கலாய்த்துள்ளனர்.

அசைக்க முடியாத மனோதிடம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஸ்ஸப்பா.. எப்ப பார்த்தாலும் எல்லாரும் ஆரிய மட்டும்தான் டார்க்கெட் பண்றானுங்க.எப்படித்தான் இந்த மனுசன் உள்ள இருக்குறாரோ என்ன ஒரு அசைக்க முடியாத மனோதிடம் என கூறியுள்ளார்.

அந்த காண்டுதான் ரியோவுக்கு
புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன் காண்டு மம்மி வெளியே போன காண்டுல பேசுறாரு இந்த ரியோவுக்கு.. என திட்டி தீர்த்துள்ளார்.

ஆரியை டார்கெட் பண்ண காரணம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆரி புரோ சோலோவா விளையாடுறாருன்னு எல்லாரும் அவரயே டார்கெட் பண்ணிட்டுருக்காங்க போல என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ரம்யா பண்ற புல்லிங்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் விஜய் டிவி உங்கள் புராடெக்ட்ஸான ரியோ, ரம்யா, அல்லது பாலா போன்று யாருக்காவது டைட்டில் கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள். அதுக்காக இந்த ரம்யா பண்ற புல்லிங் & ரியோ பண்ற கோமாளி தனத்தைப் பார்க்க வைக்காதீங்க.. என்று கூறியுள்ளார்.

இன்னைக்கு என்னலாம் இருக்கோ
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் டாஸ்க் + சண்டை பிரிக்கவே முடியாத காம்போ ஆயிருச்சு.. இன்னைக்கு என்னலாம் இருக்கோ.. வெயிட் பண்ணி பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

வம்பு இழுப்பாங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆரி நீங்க விளையாடவே வேணாம் பின்னாடி போய் நின்னுக்கோங்க ஷிவானி ஆஜித் மாதிரி எதுவும் பண்ணாம இருங்க! இல்லனா வேணும்னே சண்ட இழுத்து எதனா சொல்லிட்டே வம்பு இழுப்பாங்க!
நீங்க பதில் கொடுத்தாலும், உங்கள மத்தவங்களை குறை சொல்லுறார்னு கதைய மாத்திடுவாங்க... என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











