Just In
- 47 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 53 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 1 hr ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யார ஹீரோவாக்கணும்.. எப்படி வில்லனாக்கணும்.. எப்போ ஜோக்கராக்கணும்னு பிக் பாஸுக்கு நல்லாவே தெரியும்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியையும் ரியோவையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இன்றைய மூன்றாவது புரமோவில் மீண்டும் போரிங் போட்டியாளராக ரியோ ஆரியை நாமினேட் செய்வதை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
அக்காவை போலவே இணையத்தில் கலக்கும் குஷி கபூர்.. வைரலாகும் பிக்ஸ்!
நேற்றைய அன்சீனிலேயே ரியோவிடம் ஆரி தெளிவாக எடுத்து சொல்லி பேசிய நிலையிலும், ரியோ ஆரியை கார்னர் செய்வது நல்லாவே தெரிகிறது என வெளுத்து வருகின்றனர்.

ஆரியை காலி பண்ண
இந்த வாரம் பாலா டீம் கேப்டன் என்பதால் வெளியேற வாய்ப்பில்லை. அதனால், தனது டீமில் ஆரியை சேர்த்துக் கொண்டு பாயாசம் போட பிளான் போட்டுள்ளதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். ரெட் பாலை பாலா தெரிஞ்சே பிடிச்சது டீமில் உள்ள ஆரி மற்றும் அனிதா இருவரில் ஒருவரை வெளியேற்றவே என குற்றம்சாட்டி வருகின்றனர்.

மறைக்கும் விஜய் டிவி
இரண்டாவது சுற்றில் ஆரி 5 பந்துகளை பிடித்து ஒரு பந்தை மட்டுமே மிஸ் செய்தார். ரியோ 3 பந்துகளை மட்டுமே பிடித்து 3 பந்துகளை மிஸ் செய்தார். ஆனால், விஜய் டிவியில் அதனை காட்டவில்லை. இதனால் கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள், உங்க சொந்த டம்மி பீஸை ஹீரோவாக்க, ரியல் ஹீரோவை டம்மி ஆக்காதீங்க என மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பாவம் இங்கிலீஷ் தெரியாது போல
குரூப்னு எங்க போட்டு இருக்கு காட்டுங்க என ஆரியிடம் வம்பிழுக்கும் ரியோவை பார்த்த நெட்டிசன்கள், கூட்டம்னு போட்டா குரூப் தான பாவம் ரியோவுக்கும் இங்கிலீஷ் தெரியாது போல என கிண்டல் செய்து வருகின்றனர். குரூபிசம் சொன்னாலே இந்த ரியோ ஏன் ஃபயர் ஆகுறாரு தெரியுமா? ஏன்னா அவர் அதைத்தான் பண்றாரு என பொங்கி வருகின்றனர்.

நீங்க என்ன பண்றீங்க
ஆரியை பற்றி என்ன நினைக்கிறீங்க என பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடம் கேட்க, அவர் எல்லோரையும் குறை சொல்லி விளையாடுறாரு.. அப்போ நீங்க என்ன பண்றீங்க? என பிக் பாஸ் பதிலுக்கு கேட்க, நாங்க ஆரியை குறை சொல்லி விளையாடுறோம் என ஹவுஸ்மேட்கள் சொல்வது போல வேற லெவல் மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

குரூப்பு தான்
ஹீரோ ரேஞ்சுக்கு பண்ணுகிறேன் என்கிற நினைப்பில் ஏதோ பண்ணி இந்த ரியோ பெயரை கெடுத்துக்க போறாரு.. நீங்க, கேபி மற்றும் சோம் மூன்று பேரும் குரூப் தான் ஐயா.. இதை எப்படி மறுக்கிறீர்கள் என ரியோவிடமே கேள்வி எழுப்பி உள்ளார் இந்த நெட்டிசன்.

யாரை ஹீரோவாக்கணும்
யாரை ஹீரோவாக்கணும், ஹீரோ ஆக்கினவனை எப்படி வில்லனாக்கனும், எப்போ ஜோக்கராக்கணும்னு பிக் பாஸுக்கு நல்லாவே தெரியும் என்றும், சண்டை போடுவதை ஒரு வாரம் நல்லதுன்னு சொல்வாங்க, சண்டை போட்டது தப்புன்னு ஒரு வாரம் சொல்வாங்க, தேவையான காட்சிகளை எடிட் பண்ணி போட்டு ரசிகர்களின் மனங்களையே மாற்றி விடுவார்கள் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குற்றம்சாட்டி வருகின்றனர்.