twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னிக்கு ‘கலீஜ்’ன்னு சொன்ன சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கும் போல.. வழியனுப்ப ரெடியான ரசிகர்கள்!

    |

    சென்னை: வளர்ப்பு பிரச்சனையை கையில் எடுத்து சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டும் இரண்டாவது புரமோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    Recommended Video

    பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

    வளர்ப்பு பிரச்சனை, கலீஜ் பிரச்சனை என இந்த வாரம் சம்யுக்தா வசமாக சிக்கி உள்ளார்.

    அனிதா சம்பத் வைத்த டாப்புள் கார்ட் ஆப்பால் சம்யுக்தா வீட்டுக்கே செல்வது வேறுக் கதை.

    ஆரி வழி தனி வழி

    ஆரி வழி தனி வழி

    "தர்மம் செத்துவிடாது!... நியாயம் தோற்றுவிடாது!... ஆரி...உன் வழி தனி வழி!" என்றும், சம்யுக்தாவுக்கு சுளுக்கு எடுக்கும் படமா என்றும், இதை வெட்டி ஒட்டவா இவ்வளவு நேரம், இதுவாவது ஷோவில் வருமா? இல்லை கட் பண்ணிடுவீங்களான்னும் இந்த நெட்டிசன் ஏகப்பட்ட ட்ரோல்களை வழக்கம் போல போட்டுள்ளார்.

    பாலாவுக்கு சுளுக்கு

    பாலாவுக்கு சுளுக்கு

    ஆரி பெண்களை மட்டுமே தாக்குகிறார் என பாலா சொன்ன நிலையில், பாலா எப்போதெல்லாம் பெண்களை தாக்கினார் என்பதை மீம் போட்டு இந்த பிக் பாஸ் ரசிகர்கள் வச்சு விளாசி உள்ளார். அர்ச்சானா பாலாவிடம் பேசி விட்டு வந்த பிறகு, கேபி, அர்ச்சனா என ரவுண்டு கட்டியபோது பாலா கத்தி பேசியதை குறிப்பிட்டுள்ளனர்.

    சம்யுக்தாவுக்கு பாயாசம்

    சம்யுக்தாவுக்கு பாயாசம்

    இன்னிக்கு கலீஜ் சம்யுக்தாவுக்கு பாயாசம் இருக்கு போல.. ஆமா 12 மணிக்கு வர வேண்டிய புரமோ இன்னிக்கு 12.15 மணிக்கு வருதேன்னு டைம் எல்லாம் போட்டு இந்த நெட்டிசன் சம்யுக்தாவை வழியனுப்பி வைக்க தயாராகி விட்டார் என்றே தெரிகிறது. டம்மி மம்மிக்கு டாட்டா சொல்ல ஏகப்பட்ட ரசிகர்கள் வெயிட்டிங்.

    செருப்படி மேக்ஸ்

    செருப்படி மேக்ஸ்

    பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதல் குறும்படம் இன்னைக்கு கமல் வெளியிடப் போறாரு என்பதை பார்க்கவே ரசிகர்கள் ரொம்ப ஆவலுடன் வெயிட் பண்ணி வருகின்றனர். எல்லாரையும் மேக்ஸ் போட்டு வெறுப்பேற்றும் டம்மி மம்மி சம்யுக்தாவுக்கு இன்னைக்கு செருப்படி மேக்ஸ் இருக்கு என இந்த நெட்டிசன் விளாசி உள்ளார்.

    ஒரே பாம்

    ஒரே பாம்

    அர்ச்சனா பாட்டி, பாலாவுக்கு வேட்டு வைக்க தனது கேங்கில் இருந்து அனிதாவை அனுப்பி கொளுத்திப் போட்டதில், டாப்புள் கார்டை பெற்ற அனிதா சம்பத், சம்யுக்தாவை நாமினேட் செய்து வெளியே அனுப்பி விட்டார். ஒரே பாம் டோட்டல் பாலாஜி கேங்கும் க்ளோஸ் என அனிதா பண்ண அல்டியான விஷயத்தை கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Netizens slams Samyuktha after watching today Bigg Boss promo 2. More trolls and memes pour in to the comment section.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X