காசுக்கா பஞ்சம்.. கொஞ்சம் பெருசாதான் போடுறது.. சனம் ஷெட்டியின் போட்டோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை சனம் ஷெட்டி அணிந்துள்ள ஆடையை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
நடிகை சனம் ஷெட்டி ஒரு மாடல் ஆவார். தற்போது படங்களில் கமிட்டாகி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் காதலி ஆவார்.
பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், ஷெரினுடன் நெருங்கி பழகியதால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இதுதொடர்பாக வீடியோக்களை வெளியிட்ட சனம், இனி தர்ஷனின் வாழ்க்கையில் தான் இல்லை, ஆனால் தர்ஷனை எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பேன்

வனிதா டிவிட்
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் - ஷெரின் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சனம் மனரீதியாக பாதிக்கப்பட்டு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாக வனிதா டிவிட்டியிருந்தார்.

வனிதாவுக்கு எச்சரிக்கை
இதனால் கடுப்பான சனம், வனிதா சொல்வது பொய் என்று கூறியதோடு தன்னை பற்றி அவர் பேசக்கூடாது என எச்சரித்தார். இதனை தொடர்ந்து தான் சனம் குறித்து பதிவிட்ட டிவிட்டை டெலிட் செய்தார் வனிதா.

வைரல் போட்டோக்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன், சனம் ஷெட்டியை சந்தித்து பேசினார். இருவரும் சேர்ந்து ஒன்றாக வெளியே சுற்றி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.
வெள்ளை நிற டாப்ஸ்
இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற டீப் நெக் டாப்ஸை மட்டும் அணிந்திருக்கிறார்.

முன்னழகும்
அந்த டாப்ஸ் தொடைக்கு மேல் உள்ளதால் தொடை முழுவதும் தெரிகிறது. மேலும் டீப் நெக் என்பதால் முன்னழகும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி விட்டனர்.

காசுக்கா பஞ்சம்
உங்களுக்கு என்ன காசுக்கா பஞ்சம், பெரிய ஆடையாக வாங்கி முழுவதுமாக உடுத்த வேண்டியதுதானே என கேட்டு வருகின்றனர். மேலும் பேன்ட் போட மறந்துவிட்டீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

நீங்கள் குழந்தையில்லை
மேலும் இதுபோன்ற உடை உடுத்த நீங்கள் ஒன்றும் குழந்தை இல்லை, கொஞ்சம் நாகரிகமாக உடை உடுத்துங்கள் என்றும் நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சனம் ஷெட்டியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











