ஏன் இந்த பொழப்பு.. ஆகாதுனு தெரிஞ்சும் அனிதாவிடம் அவரை பற்றி பேசும் சனம்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டி, அனிதா சம்பத்திடம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் புரணி பேசியது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளுமே ஏதாவது ஒரு சண்டை, வம்பு தும்பு என களைக்கட்டுகிறது பிக்பாஸ் ஹவுஸ்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரம்பமே அமர்க்களமாய் இருந்தது. குக்கர் மூடியை கழுவிக் கொண்டிருந்த சனம் ஷெட்டி, தெரிந்தும் தெரியாததை போல இதில் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

பதில் சொல்லாத சுரேஷ்
அதுகுறித்து பலமுறை கிட்சனில் ஹவுஸ்மேட்ஸ்கள் பேசிய நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மீண்டும் சனம் கேட்டதால், பதில் சொல்ல விரும்பாத சுரேஷ் சமையல் வேலையை பார்க்க தொடங்கினார்.

கார்னர் செய்கிறீர்கள்
இதனால் இன்சல்ட்டான சனம் ஷெட்டி, என்ன பிரச்சனை என்றுதானே கேட்டேன் அதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என சுரேஷிடம் ஆர்க்யூ செய்ய தொடங்கினார். அதற்கு தெரிந்தும் தெரியாததுபோல் நீங்கள் கேட்பது என்னை கார்னர் செய்வது போல் இருக்கிறது என்றார் சுரேஷ்.

பெரிய வார்த்தை
டவுட் கேட்டேன், அதற்கு ஏன் கார்னர் என்ற பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள், பேசுவதற்கு முன் யோசியுங்கள்.. நீங்கள்தான் என்னை கார்னர் செய்வது போன்று பேசுகிறீர்கள் என்றார். அதற்கு நீங்கள் என்னை கார்னர் செய்கிறீர்களா என சுரேஷ் கேட்டார்.

ஃபேக் வார்த்தை வேண்டாம்
அதற்கு இல்லை என்று சனம் சொல்ல, நானும் உங்களை கார்னர் செய்யவில்லை.. அம்மா ராஜாத்தி.. ஐ லவ் யூ என்றார். அப்போதும் விடாத சனம் நீங்கள் கோபமாக இருந்தால் கோபமாகவே இருங்கள்.. இந்த மாதிரி ஃபேக் வார்த்தைகளை சொல்லாதீர்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

சனம் ஷெட்டி புரணி
அதற்கு நான் கோபப்படவில்லை என்று கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி, தொடர்ந்து தனது வேலையை பார்த்தார். ஆனால் கார்டன் ஏரியாவுக்கு சென்ற சனம் ஷெட்டி, அனிதாவின் அருகில் அமர்ந்தப்படி அவரிடம் சுரேஷ் சக்கரவர்த்தி குறித்து புரணி பேசினார்.

எப்படி கேப்டன் ஆனார்
அதாவது, நான் என்ன சொன்னாலும் அது தவறாகவே முடிகிறது. பாலாஜி பேசியதாவது, எங்களுக்குள் ஒரு பிரச்சனை இருந்தது. ஆனால் இவருக்கு என்ன வந்தது.. ஏன் இவ்வளவு ரூடாய் நடந்து கொள்கிறார். இவர் எப்படி கேப்டன் ஆனார் என்பதுதான் எனக்கு டவுட்டாய் இருக்கிறது என்றார்.

உஷாரான அனிதா
அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஆகாது என்று தெரிந்து அவரிடம் இவரைப் பற்றி சொல்ல குளீர் காய பார்த்தார் சனம் ஷெட்டி. ஆனால் கேமரா ஃபோகஸ் செய்வதை கவனித்து உஷாரான அனிதா, ஒரு சில வார்த்தைகளை ஒத்து ஊதிவிட்டு அமைதி காத்தார்.

எதுக்கு இந்த பொழப்பு
ஏற்கனவே எல்லாவற்றுக்கும் ஆர்க்யூ செய்யும் சனம் ஷெட்டியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், நேற்று அவரது நடவடிக்கையை பார்த்து எதுக்கு இந்த பொழப்பு என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். அதோடு இந்த வாரம் நீதான் எலினேட் ஆவ ஆத்தா என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











