நான்தான் கொட்டினேன்னு சொன்னா என்ன குடியா மூழ்கி போயிடும்.. சனம் ஷெட்டியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டியை கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் சனம் ஷெட்டியை வெளுத்து எடுத்துள்ளார் கமல். அதாவது குப்பை தொட்டியில் சாப்பாடு கொட்டப்பட்டது தொடர்பாக விசாரிக்கிறார் கமல்.
கடந்த வாரம் சாப்பாடு கொட்டிய விவகாரத்தில் ஆரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சனம் ஷெட்டி. பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் போது சனம் ஷெட்டி இந்த பிரச்சனையை உருவாக்கினார்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்
தேவையில்லாத ஒரு பிரச்சனையை பெரிதாக்கினார். அதோடு வீட்டுக்குள் யாரும் இல்லாத போது ஒரு மாதிரியாகவும் எல்லோரும் வந்த போது ஒரு மாதிரியாகவும் நடந்து கொண்டார் சனம் ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.

விளாசிவிட்டுள்ள நெட்டிசன்ஸ்
இந்நிலையில் இந்த பிரச்சனையை கமல் கையில் எடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் செம ஜாலியாகியுள்ளனர். சனம் ஷெட்டியையும் விளாசி விட்டுள்ளனர்.
ஒத்துக்கவேயில்லையே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்போதுகூட இந்த ஜவ்வு மிட்டாய் சனம் ஒத்துக்கவேயில்லையே !.. நான்தான் கொட்டினேன்னு சொன்னா என்ன குடியா முழுகிபோயிடும்.. யப்பா!... இதுவெல்லாம் மெண்டல் கேசுங்க ! நமக்குதான் பைத்தியம் பிடிக்கும்! என திட்டி தீர்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
யார் மேல தப்புன்னு தெரியும்
மற்றொரு நெட்டிசனான இவர், சனம், அனிதா, பாலா , ஷிவானி எல்லாம் கேள்வி கேட்டது சரி ஆனா ஹவுஸில் உள்ள ரியோ கேங்குக்கு சிறப்பு சலுகை தராதது பத்தியும் கொஞ்சம் கேளுங்க.. சுச்சி வச்ச குற்றச்சாட்ட விசாரிச்சாதான் யாரு மேல தப்புன்னு தெரியும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஆரியே அரண்ட தருணம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாழைப்பழ காமெடி போல.. இது சோற்று காமெடி.. ஆரியே அரண்ட தருணம் அது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
சோத்த கொட்டுதுகள்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒருவேளை சோத்துக்கு வழி இல்லாமல் இருக்குது சனங்கள். இங்க இதுகள் சோத்த கொட்டுதுகள். எல்லாம் பணம் செய்யும் மாயை... என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
தலைகுனிந்த சனம்
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அன்று உணவையும் வார்த்தையும் வீணாய் எறிந்த சனம்! இன்று வீணாய் எறிந்தவைகளுக்காக தலைகுனிந்த சனம்! என நக்கலடித்துள்ளார்.
சூப்பர் கமல் சார்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சூப்பர் கடந்த வாரத்தில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் பற்றியும் பேசிட்டிங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
கிழிந்து தொங்கும் சனம்..
புரமோவில் சனம் ஷெட்டியின் ரியாக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், சனம் ஷெட்டி நாறு நாராய் கிழிந்து தொங்கும் நிலை. இனி ஆவது திருந்துங்கப்பா.. என கூறியுள்ளார்.
விபூதி அடிக்க பாக்குறீயா..
மற்றொரு நெட்டிசனான இவர், நானா இருக்கலாம்னு சொல்லிட்டு விட்டுருக்கலாம், அதுக்கு ஆரியிடம் போட்ட சண்டை தேவை இல்லாதது.. அனிதா மாதிரி அதையே பிடிச்சுட்டு ரொம்ப நேரம் விவாதம் பண்ணிட்டு இருந்தா, இதுல சமாளிஃபையிங்.. ஆண்டவருக்கே விபூதி அடிக்க பாக்குறியா.. ஆரிய பாராட்டுனா ப்ராடு பயில்வான் ரசிகர்கள் ஏன் கோவிச்சுக்குறாங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
கன்ஃபியூஸ் பண்ணிடுச்சு..
ஆனா சனம் ஷெட்டி பண்ணது யாரும் மறக்க மாட்டாங்க .. பாவம் ஆரி ப்ரோ.. ஆரி ப்ரோவையே கன்ஃபியூஸ் பண்ணிடுச்சு அன்னைக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
கமல் டயலாக்
சனம் - இல்லனு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்கிறார்.. கமல் - கத்துக்கனும்.. நானாக கூட இருக்கலாம் என புரமோவில் சனம் மற்றும் கமல் பேசிய டயலாக்குகளை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











