பாட்டியதானே சந்தோஷமா வச்சுக்க சொன்னாங்க.. ஷிவானி தப்பா நினைச்சுட்டாங்க போல.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானியை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பிக்பாஸ் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இதில் பாட்டியாக அர்ச்சனா உள்ளார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என அனைவரும் தீபாவளி பண்டிகைக்காக பாட்டி வீட்டுக்கு வருகின்றனர்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
அனைவரும் சொத்துக்காக ஆசைப்பட்டே பாட்டி வீட்டுக்கு செல்வதாகவும் கடைசியில் யாருக்கு சொத்து கிடைக்கும் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும். பிக்பாஸ் கொடுத்து வரும் டாஸ்க்குகளை ஏற்கனவே கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள் இந்த டாஸ்க்கையும் வச்சு செய்துள்ளனர்.

சாக்கு சொல்லி டேரா..
பிக்பாஸ் டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன், எல்லாம் தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்தமாதிரி வருசம் முழுவதும் ஏதோ ஒரு சாக்கு சொல்லி டேரா போடுவாங்க போலிருக்கே இந்த பிக்பாசு குடோன்ல! என கலாய்த்துள்ளார்.

இது டஃப்பான டாஸ்க்கா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டியர் பிக்பாஸ்.. ப்ளீஸ் டஃப் டாஸ்க் கொடுக்கங்கள். இது டஃப்பான டாஸ்க்கா?
போங்கடா நீங்களும் உங்க டாஸ்க்கும் என்று விளாசியுள்ளார்.

அன்பை வாங்கிகோங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா பேசி பழகாதவங்க நல்லா பேசி பழகிகோங்க!.. சண்ட போடாதவங்க நல்லா சண்டை போட்டு பழகுங்க!.. அன்பு கிடைக்காதவங்க அன்பை வாங்கிகோங்க!... அப்படியே பொங்கல் பண்டிகையும் முடிச்சுட்டு வாங்க!... மாட்டுபொங்கலுக்கு பத்து மாடும் அனுப்புறோம்! ஓகே! என குறிப்பிட்டுள்ளார்.

ஷிவானி லெக்கின்ஸ்
பிக்பாஸின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன், பாலாஜி போட்டிருக்கும் காஸ்ட்யூமை பார்த்து ஷிவானி யோட லெக்கின்ஸ் போட்டு இருக்கானோ.. என கேட்டுள்ளார்.

எப்போ உண்மைய பேசுவ?
பிக்பாஸின் நேற்றைய லெட்டர் டாஸ்க்கில் பாலாஜி எழுதிய லெட்டர் குறித்து டிவிட்டியுள்ளார். அதாவது தீபாவளி கடிதம் எழுதும் டாஸ்கில் பயில்வான் நேற்றும் பொய் பேசுற மாதிரியே இருந்ததே!... எப்பதாம்பா நீ உண்மையை பேசுவ? என கூறியுள்ளார்.

மெகா சீரியல்..
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் இல்லை என்பதை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன், அதாவது, தீபாவளி வர போகுதுனு ஒரு வாரம் நாமினேஷன் கேன்சல். தீபாவளி முடிச்சுருச்சுனு ஒரு வாரம் நாமினேஷன் கேன்சல். தீபாவளி பலகாரம் தின்னது செரிக்கலனு ஒரு வாரம் நாமினேஷன் கேன்சல். யாரையும் வெளிய அனுப்பாம பேசாம எல்லாரையும் வச்சு ஒரு மெகா சீரியல் எடுடா பிக்பாஸ் என கூறியுள்ளார்

பர்ஃபாமன்ஸ் பண்ணுமா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எம்மா ஷிவானி, இந்த மாதிரி மொக்க டாஸ்க்லயாவது எதாவது பர்ஃபாமன்ஸ் பண்ணுமா.
எப்பவும் சும்மாவே நடந்துட்டு இருந்தா என்னமா அர்த்தம் என கேட்டுள்ளார்.

இங்கயும் கடலையடா..
ஏலேய் தீபாவளிக்கு சொந்தங்கள் பாட்டிக்கூட சந்தோசமா இருக்க வந்தீகளா! இங்கயும் கடலையாடா!

ஷிவானிக்கு தமிழ் புரியாதா?
பாட்டியை தானே சந்தோஷமா வச்சுக்க சொன்னாங்க, ஷிவானிக்கு தமிழ் புரியாதா? எல்லாரும் பாட்டியை மகிழ்விக்க முயற்சி செய்யும் போது, இவங்க பாலாவை மகிழ்விக்குறாங்க. ஐயோ கடவுளே. பேரை கெடுத்துட்டு தான் வெளியே வருவாங்க போல.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











