AK Vs SK: போஸ்டர் விவகாரம்.. சிவகார்த்திகேயனுக்கு விழும் ஊமைக்குத்து.. எல்லாரும் அஜித் ஆகிட முடியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் பராசக்தி. இந்த படம் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஜனவரி மாதம் 14அம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் விஜய் உடன் சில உரசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இணையவாசிகள் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதற்காக இணையவாசிகள் முன் வைக்கும் காரணம் மிகவும் கவனத்தை பொது வெளியில் ஈர்த்துள்ளது.
அதாவது பராசக்தி படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம். படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும் ரவி மோகன் வில்லனாகாவும் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஸ்ரீலீலா, அதர்வா, பிரித்வி பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் உருவாகும் 100வது படம் பராசக்தி. படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரவி மோகன் - சிவகார்த்திகேயன்: படக்குழு தரப்பில் இருந்து சில போஸ்டர்கள் படத்தின் புரோமோஷனுக்காக வெளியிடப்பட்டது. அதில் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் மட்டுமே இருக்கிறார். அதில் சிவகார்த்திகேயனை விட சீனியர் நடிகரான ரவி மோகனுக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்பது பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தனது சீனியர் நடிகருக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அவருக்கும் போஸ்டரில் இடம் கொடுத்திருக்க வேண்டும் என்ற பேச்சை இணையவாசிகள் தொடங்கி உள்ளனர்.
அஜித்குமார்: இதற்கு இணையவாசிகள் அஜித்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு விளாசி வருகிறார்கள். அதாவது நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர்களில் அவருக்கு எதிராக, எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு படத்தின் போஸ்டரில் தனக்கு இணையானதாக இடம் கொடுக்க அஜித் குமார் சொன்னதாக ரங்கராஜ் பாண்டேவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் வினோத்திடம் ரங்கராஜ் கேட்டதற்கு, " நாங்கள் முதலில் சிறிய அளவில் தான் உங்களது போட்டோவை வைத்திருந்தோம், அஜித் சார் தான் அவருக்கு இணையாக உங்களது போட்டோவை வைக்கச் சொன்னார்" என்று கூறினார். தற்போது பாண்டே இவ்வாறு கூறிய வீடியோவை இணையவாசிகள் பகிர்ந்து சிவகார்த்திகேயனை கடுமையாக சாடி வருகிறார்கள்.
ரசிகர்கள் விளாசலும் பதிலும்: அதாவது பராசக்தி போஸ்டரில் ரவி மோகனுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம். ரவி மோகன் சிவகார்த்திகேயனை விட சீனியர் நடிகர், அப்படி இருக்கும்போது ரவி மோகனுக்கும் போஸ்டரில் இடம் கொடுத்திருக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் படத்தின் பெயருக்கு மேல், முதலில் ரவி மோகன் பெயர் அதற்கு கீழ் தான் சிவகார்த்திகேயன் பெயர் உள்ளது. சிவகார்த்திகேயன் தனது சீனியர் நடிகருக்கு எல்லா மரியாதையையும் கொடுத்து வருகிறார் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











