நீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல? பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கவிஞர் சினேகன் திருமணம் முடித்துள்ள நிலையில் அவர் மட்டும் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recommended Video
கவிஞர் சினேகன் தஞ்சாவூட்ர் மாவட்டம் புதுகரியாப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
தொடர்ந்து புத்தம் புதிய பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிக்பாஸ் முதல் சீசன்
இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள சினேகன், 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். இதில் ரன்னர் அப் ஆனார் சினேகன்.

கட்டிப்பிடி வைத்தியர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்ததால் விமர்சனத்துக்குள்ளானார் சினேகன். மேலும் கட்டிப்பிடி வைத்தியர் என்று ரசிகர்கள் அவரை அழைத்து வந்தனர்.

யோகி படத்தின் மூலம்
பாடலாசிரியர் மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சினேகன். யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், உயர்திரு 420, கோமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பொம்மி வீரன், எவனும் புத்தனில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று திருமணம்
அரசியலிலும் தடம் பதித்துள்ள சினேகன் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். 43 வயதான சினேகனுக்கு நேற்று கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது.

8 ஆண்டுகளாக காதல்
நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் கன்னிகா அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்து வந்தனர்.

கமல் தலைமையில் திருமணம்
இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் சினேகன் கன்னிகா திருமணம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைத்தார்.

டைனமிக் புரட்சி திருமணம்
இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பாடலாசிரியர் சினேகனின் திருமணம் பேசு பொருளாகியுள்ளது. அதவாது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினேகன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். அந்த திருமணம் dynamic புரட்சி திருமணம் என்று கூறப்பட்டது.

தாலி கட்டாமல் திருமணம்
இந்த திருமணத்தில் பேசிய சினேகன் அன்று ஆரிய வர்கத்தின் ஆக்கிரமிப்பு தமிழன் மீது விழுவதற்கு முன்னாள் எப்படி இருந்தானோ அப்படியே மீட்டுக் கொண்டுவரும் ஒரு புரட்சி தான் இந்த டைனமிக் திருமணம் என்று பேசினார்.
அந்த திருமணத்தில் விதவை பெண்கள் மாலை எடுத்துக்கொடுக்க தாலி கட்டாமல் இந்த திருமணம் நடைபெற்றது.

சர்ச்சை திருமணம்
மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் மணப்பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்து சென்றனர். மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் தோழர்கள் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க ஏன் அப்படி பண்ணல?
தற்போது அந்த வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்ஸ், மற்றவர்களுக்கு டைனமிக் திருமணம் செய்து வைத்த சினேகன், தனது திருமணத்தை மட்டும் ஏன் அப்படி நடத்தவில்லை? கமல் தாலி எடுத்துக் கொடுக்க இந்து முறைப்படி திருமணம் செய்தது ஏன் என்றும் என விளாசி வருகின்றனர்.

தாலி கட்டி திருமணம்
அப்பாவி மக்களை ஏமாற்றி டைனமிக் திருமணம் செய்து வைத்த சினேகன் தனது திருமணத்தை மட்டும் இந்து முறைப்படி தாலி கட்டி நடத்திக் கொண்டது ஏன் என்றும் விளாசி வருகின்றனர். மேலும் ஊருக்குதான் உபதேசமா? நீங்கள் எதையும் பின்பற்ற மாட்டீர்களா என்றும் சினேகனை வச்சு தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











