சுச்சி தெரிஞ்சுதான் பண்றாங்களா? அதை எதுக்கு சொல்லணும்.. சுச்சி பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சுச்சி ஆரி குறித்து பப்ளிக்காய் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பழைய போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதுமே ஒவ்வொரு நபராய் வரவழைக்கப்பட்டனர்.
ரசிகர்கள்ன மத்தயில் பெரும் வரவேற்பை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் வராமல் இருந்தது. பெரும் குறையாய் இருந்தது

ஆட்டம் கொண்டாட்டம்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கடைசி நபராய் சுரேஷ் சக்கரவர்த்தியும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வந்தவர்கள் அனைவருமே அவரவர் பங்குக்கு ஆட்டம் கொண்டாட்டம் என இருந்தனர்.

பேச்சால் சர்ச்சை..
பின்னர் பிக்பாஸின் உருக்கமான உரைக்கு பிறகு நேற்று ஃபைனலிஸ்ட் 5 பேரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுமே பிக்பாஸ் வீட்டில் இருந்து விடை பெற்றனர். முன்னதாக சுச்சி ஆரி, அனிதா ஆகியோரிடம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் பண்ணுவீங்களா?
அதாவது சுச்சி, அனிதா மற்றும் ஆரி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த வீட்டை மிஸ் பண்ணுவீங்களா ஆரி என்று கேட்டார். அதற்கு பதில் கூறி ஆரி, நிச்சயமாக என்னை ஸ்ட்ராங்கான பர்சனாக காட்டிய வீடு இது என தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

சுச்சி பேச்சு..
மேலும் இந்த வீட்டில் அதிக முறை ஜெயிலுக்கு போன ஆள் நான்தான். நான்கு முறை ஜெயிலுக்கு போயிருக்கிறேன் என்றார் ஆரி. அப்போது பேசிய சுச்சி, இந்த வீட்டிலிருந்து அதிக ஆதாயம் பெற்ற நபர் இவர்தான் என்று ஆரியை குறிப்பிட்டு அனிதாவிடம் கூறினார்.

சுச்சி ஸ்பாயிலர்
இதனை பார்த்த ரசிகர்கள் சுச்சி ஏன் இதை சொல்கிறார் என விளாசி வருகின்றனர். நல்லதோ கெட்டதோ வெளியே இருந்து வரும் போட்டியாளர்கள் எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனாலும் சுச்சி பேசுவதை பார்த்து அவர் ஒரு ஸ்பாயிலர் என விளாசி வருகின்றனர்.

புட்டு புட்டு வைத்த சுச்சி
சுச்சி வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தபோதும் கூட மக்கள் வெளியே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புட்டுபுட்டு வைத்தார். தற்போது விருந்தாளியாக வந்தபோதும் அதே வேலையைதான் செய்தார் சுச்சி.

பழைய சீசன்களில்..
வெளியே இருந்து போகும் போட்டியாளர்கள் வெளியே இருக்கும் நிலவரம் குறித்து உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் ஷேர் செய்துக் கொள்ளக்கூடாது என்பது பழைய சீசன்களில் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்யப்பட்டது.

யாரும் ஃபாலோ பண்ணல..
ஆனால் இந்த சீசனில் அப்படி யாரும் எதையும் பின்பற்றுவில்லை. சம்யுக்தா வோட்டிங் டிஃப்ரன்ஸ் குறித்து பாலாஜியிடம் கூறினார். இதேபோல் அர்ச்சனா நிஷா என அனைவருமே எந்த விதிமுறைகளையுமே பின்பற்றாமல்தான் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











