யாரை கரெக்ட் பண்ண இந்த கெட்டப்.. விளாசிய நெட்டிசன்ஸ்.. ஒத்த போட்டோவை போட்டு வாங்கி கட்டிய தர்ஷன்!
சென்னை: தர்ஷன் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நேர்மையாக விளையாடியதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சனம் ஷெட்டி புகார்
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன் பிக்பாஸ் நிழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் தர்ஷன், தற்போது பட வாய்ப்புகள் கிடைத்ததால் தன்னை கழட்டி விடுவதாக தெரிவித்தார்.

போட்டிருக்கும் சட்டை கூட
அதோடு இதுவரை தர்ஷனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாகவும், அவர் போட்டிருக்கும் சட்டைகள் கூட நான் வாங்கி கொடுத்ததுதான். கஷ்டப்பட்ட போதெல்லாம் என்னை காதலித்த தர்ஷன், தற்போது பட வாய்ப்பு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என கண்ணீர் மல்க கூறினார் சனம் ஷெட்டி.

தர்ஷன் குற்றச்சாட்டு
மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தன்னை சேர்த்து வைத்து கள்ள தொடர்பு இருப்பதாக பேசுகிறார் என்றும் கதறினார். இதனை தொடர்ந்து சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறிய தர்ஷன், சனம் ஷெட்டிக்கு முன்னாள் காதலருடன் தொடர்பு உள்ளது, அவருடன் இரவு முழுக்க சனம் ஷெட்டி பார்ட்டி பண்ணினார் என குற்றம்சாட்டினார்.

தர்ஷன் போட்டோ
மேலும் சனம் ஷெட்டி பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும், சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார் தர்ஷன். இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தர்ஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷேர் செய்திருக்கிறார்.

என்ன தைரியம்
அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். அடுத்தப் பொண்ண கரெக்ட் பண்ணி காசு கறக்க இந்த கெட்டப்பா என கேட்டுள்ளனர் சில நெட்டிசன்கள். இன்னும் சிலர் சனம் ஷெட்டி வாங்கி கொடுத்த சட்டை என்றும் எந்த தைரியத்தில் நீ இன்ஸ்டா கிராமில் பிக்சர் போடுகிறாய் என்றும் விளாசி தள்ளியிருக்கின்றனர்.
ஜூலி நீங்கள்தான்
இன்னும் சிலர் பிக்பாஸ் சீசன் 3யின் ஜூலி நீங்கள்தான் என்றும் சமூக வலைதளத்திற்குவர மாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இதிலும் பொய்யா என கேட்டுள்ளனர். மேலும் சிலர் எந்த பெண்ணையாவது வளைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே உள்ளீர்களா என கேட்டுள்ளனர். அதேநேரத்தில் சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications