கர்மா உன்ன சும்மாவிடாது தர்ஷன்.. சனம் ஷெட்டியின் போட்டோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Sherin Bikini goes viral | Sanam Tharshan | Bigg Boss 3

சென்னை: சனம் ஷெட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தர்ஷனுக்கு சாபம் விடாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் காதல் முறிவும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவும் பிரச்சனையும்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சனம் ஷெட்டிக்கு அறிமுகமானார் தர்ஷன்.

பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். சனம் ஷெட்டியின் பெற்றோர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பாக சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

உதவிய சனம் ஷெட்டி

உதவிய சனம் ஷெட்டி

பெற்றோருக்கு கூட தெரியாமல் காதலி சனம் ஷெட்டியை நிச்சயம் செய்துள்ளார் தர்ஷன். தர்ஷனுக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை நடிகை சனம் ஷெட்டிதான் வாங்கிக்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சனம் ஷெட்டி மூலமாகத்தான் சென்றிருக்கிறார் தர்ஷன்.

முன்னாள் காதலர் விளக்கம்

முன்னாள் காதலர் விளக்கம்

சனம் ஷெட்டி தனக்கு ஏராளமான உதவிகளை செய்திருப்பதாக தர்ஷனே தனது செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சனம் ஷெட்டிக்கு தனது முன்னாள் காதலருடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார் தர்ஷன். தர்ஷன் சொல்வது போல் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் கூறியும் தர்ஷன் சமாதானம் ஆனதாக தெரியவில்லை.

புறக்கணித்த தர்ஷன்

புறக்கணித்த தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்த பிறகு தர்ஷனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தர்ஷனுக்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது. அதேபோல் பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பிறகு தர்ஷன் சனம் ஷெட்டியை புறக்கணித்ததாக தெரிகிறது.

பழைய போட்டோக்கள்

பழைய போட்டோக்கள்

மேலும் பிக்பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு கிடைத்த சில தோழிகளும் சனம் ஷெட்டிக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சனம் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. வெள்ளை நிற உடையில் #malaysiacalling என்ற ஹேஷ்டேக்கில் சனம் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

கர்மா சும்மா விடாது

கர்மா சும்மா விடாது

தர்ஷனுடன் சேர்ந்து எடுத்த அந்த போட்டோவில் கண்களில் கண்ணீரும் முகத்தில் சோகமும் ததும்பி பாவமாய் நிற்கிறார் சனம் ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள், தர்ஷனை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்து வருகின்றனர். பெண் பாவம் சும்மாவிடாது, கர்மா நிச்சயம் உனக்கு பதில் கொடுக்கும் என விளாசியிருக்கின்றனர்.

நிச்சயம் அனுபவிப்பார்

நிச்சயம் அனுபவிப்பார்

மேலும் இந்த போட்டோவை எடுப்பதற்கு முன்பு ஏதோ பிரச்சனை நடந்துள்ளது. சனம் ஷெட்டி நன்றாக அழுதிருக்கிறார் என்பது இந்த போட்டோவில் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தர்ஷனின் நினைவுகளையும் அவரது போட்டோக்களையும் அழித்து விடுங்கள். நீங்கள் உண்மையாக இருக்கும் போது அவர் உங்களை ஏமாற்றியிருந்தால் அதற்கான பலனை அவர் நிச்சயம் அனுபவிப்பார் என்றும் பதிவிட்டுள்ளனர்.

மாணிக்கம்

மாணிக்கம்

மேலும் தனக்காக எதுவும் செய்ய தயாராக இருந்த பெண்ணை புறக்கணிக்கும் அவருக்குதான் இழப்பு. உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தர்ஷன் ஒரு விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்துவிட்டார் என்றும் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X