Don't Miss!
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி பண்ணும் ஒட்டுமொத்த பிராங்க் தான் பிக் பாஸ்.. கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: புரமோவில் சண்டையை காட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிராங்க் செய்து ஒட்டுமொத்த ஷோவும் ஒரு பிராங்க் ஷோ என்கிற அளவுக்கு இந்த சீசனை பிக் பாஸ் குழு நடத்தி வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிரேக்கிங் நியூஸ் சேனலில் எதுக்கு பிராங் ஷோ என்றும் அபிஷேக் ராஜா ஒரு யூடியூபர் என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டே வருகிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
தாமரை எங்கே தொட்டால் சூடாவார் என அறிந்து கொண்டே பிரியங்கா இந்த கேமை ஆடிவிட்டு கடைசியாக சிபியை வைத்தே பிராங்க் பண்ணோம் என சொன்னது வேற லெவல் ஹைலைட்.
ஏமாற்றிய சிபி
தாமரை செல்வி மற்றும் இமான் அண்ணாச்சி பற்றி தப்பா பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என செய்தி வாசிப்பாளரான சிபி எழுந்து வெளியே போக செய்தி செனலை கடந்து பிக் பாஸ் வீட்டிலேயே மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. ஆனால், ஒட்டு மொத்த நிகழ்வையும் ரெட் டிவி நியூஸ் சேனல் பண்ண பிராங்க் தான் என சொல்லி முடிக்க தாமரை டென்ஷன் ஆகி விட்டார்.
எல்லாமே பிராங்க்
செய்தி சேனலில் பிராங்க் எதற்கு வந்தது என்கிற கேள்வியை ரசிகரான சஞ்சீவ் கேட்டிருக்க வேண்டும் ஆனால், அதற்கு அதிக மார்க் கொடுத்து ரெட் டிவியை ஜெயிக்க வைத்து விட்டார் என ராஜு ஆர்மியினர் கடுமையான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.
பிராங்க் பிக் பாஸ்
தாமரை செல்வி போல தான் பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களும் இந்த ஷோவை கமல் ஸ்க்ரிப்டட் இல்லை என சொல்கிறாரே என நம்பி இத்தனை சீசன்களாக பார்த்து வருகிறோமே இன்னும் நீ என்ன பைத்தியக்காரனாகவே நினைச்சிட்டு இருக்கியா என டிக்கிலோனா காமெடியை போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பிரியங்கா பிளான்
பிரியங்கா மற்றும் அபிஷேக் டீமாக செயல்பட்டு நடத்திய பக்கா பிராங்க் கேமில் திட்டமிட்டபடியே தாமரை செல்வி வந்து மாட்டிக் கொண்டார். நல்ல வேளை புலிகேசியாக மதுமிதா நடித்த போது அவருடன் பிராங்க் பண்ணி சண்டை போட்டது போலத்தான் இப்பவும் பிக் பாஸ் டீம் சொல்லி இந்த சண்டையை போட்டேன் என்கிற உண்மையை சொல்லாமல் நாடக நடிகை என்பதை நிரூபித்து விட்டார் தாமரை செல்வி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.