புது கணவர் மகள்களுடன் வீக்கென்ட் ஷாப்பிங் போன வனிதா.. வெளுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் தனது மூன்றாவது கணவர் மற்றும் மகள்களுடன் ஜாலி ஷாப்பிங் போன போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார் விஷ்வல் எடிட்டரான பீட்டர் பாலை கடந்த மாதம் 27ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை மீட்டுத்தருமாறு போலீஸில் புகார் அளித்தார். வனிதா தனது கணவரை மயக்கி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ஹெலனுக்கு ஆதரவு

ஹெலனுக்கு ஆதரவு

இதனை தொடர்ந்து வனிதாவின் திருமணம் சர்ச்சையானது. அவரது திருமணம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பேசினர்.

கடுப்பான வனிதா

கடுப்பான வனிதா

இதனால் கடுப்பான வனிதா, திரை பிரபலங்களான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் மீதும் போலீஸில் புகார் அளித்தார். கூடவே சமூக வலைதளங்களிலும் அவர்களுக்குள் கடுமையான வார்த்தைப் போர் நிலவி வருகிறது.

காருக்குள்ளேயே பிரியாணி

காருக்குள்ளேயே பிரியாணி

ஆனால் நடிகை வனிதா நேற்று பீட்டர் பால் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடினார். தொடர்ந்து நேற்று இரவு காரிலேயே பிக்னிக் செய்தனர். காருக்குள்ளேயே பிரியாணி சிக்கன் என வெட்டு வெட்டினர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்நிலையில் நடிகை வனிதா, இன்று வீக்கெண்ட் ஷாப்பிங் என கணவர் மகள்களுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அந்த போட்டோக்களை தனது சமுக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

என்ன மனுஷன் நீ?

என்ன மனுஷன் நீ?

வனிதாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், பீட்டர் நீ பெத்த பிள்ளைகள் மேல உனக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லையா.. என்ன மனுஷன் நீ.. கேவலம் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Vanitha Vijayakumar பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?
கர்மா இஸ் பூமராங்

கர்மா இஸ் பூமராங்

நீங்க ஒரு வெட்கம் இல்லாத பெண், இதற்காக அனுபவிப்பீர்கள், கர்மா இஸ் பூமராங் என்றும் பீட்டர் பாலை நம்பி உங்களின் மகள்களை விடாதீர்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X