தனது திருமணம் குறித்து விமர்சித்த தயாரிப்பாளர்.. கவின் ரசிகர்களிடம் கோர்த்துவிட்ட நடிகை வனிதா!
சென்னை: தனது மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்த தயாரிப்பாளர் ரவீந்திரனை கவின் ரசிகர்களிடம் கோர்த்து விட்டுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்.
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27ஆம் தேதி தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார்.
ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் வனிதா அவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டது பெரும் பேசு பொருளானது.

தயாரிப்பாளர் ரவீந்திரன்
சமூக வலைதளங்களிலும் பலரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்து வாங்கிக் கட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர் வனிதாவின் திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

மன்னிப்பு கேளுங்கள்
அவரது பேச்சைக் கேட்ட வனிதா, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளார். மேலும் தன்னைப்பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசரவில்லை தயாரிப்பாளர் ரவீந்திரன்.

கவின் ரசிகர்களே..
இந்நிலையில் ரவீந்திரன் மற்றும் வனிதாவுக்கு இடையிலான மோதல் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அனைத்து கவின் ரசிகர்களும் இந்த மனிதர் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுகிறார்... அவர் வச்சு செய்ய தகுதியானவராக உள்ளார்.. ஊடகங்கள் பயனற்ற நபர்களிடம் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்பதை நிறுத்த வேண்டும் என டிவிட்டியிருக்கிறார்.

கவின் குறித்து விமர்சனம்
கவின் நடிப்பில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தை தயாரித்தவர் ரவீந்திரன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பங்கேற்ற போது அவரைப் பற்றி ரவீந்திரன் விமர்சித்ததாக தெரிகிறது. இதற்காக கவின் ரசிகர்களும் அவரை சாடியதாக தெரிகிறது.

எதுக்கு இழுக்குறீங்க?
இந்நிலையில் அதனை நினைவுப்படுத்தி கவின் ரசிகர்களிடம் அரை கோர்த்துவிட்டுள்ளார் நடிகை வனிதா. வனிதாவின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் நீங்கதான் தைரியமான ஆள் ஆச்சே நீங்களே இந்த விஷயத்த டீல் பண்ணுங்க எதற்கு கவின் ரசிகர்களை இழுக்குறீங்க? முடியலையா என கேட்டுள்ளனர்.

எல்லை மீறுகிறீர்கள்
இன்னும் சில நெட்டிசன்கள், அவர் ஏன் சாடுவதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை? அவர் ஏதாவது தவறாக சொன்னாரா? அவர் கேள்விக்கு பதிலளிக்கிறார்! யாரும் தப்பு செய்யாதபோது அவர்களிடம் போய் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் என்று கேட்க முடியாது. அவர் உங்களுக்கு மரியாதையுடன் செய்தி அனுப்பினார். நீங்கள் உங்கள் வரம்புகளை மீறுகிறீர்கள் வனிதா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
Recommended Video

நீங்களே ஹேண்டில் பண்ணுங்க
இது என்னுடைய பர்சனல் விஷயம்னு சொன்னீங்க.. இப்போ எதுக்கு கவின் ரசிகர்களை கூப்பிடுறீங்க? உங்க பர்சனல் பிரச்சனையை நீங்களே ஹேண்டில் பண்ணிக்குங்க. கவின் ரசிகர்கள் அவரை சப்போர்ட் பண்ணதான் இருக்கிறாகள், உங்களின் பிரச்சனையில் அவரை ஈடுபடுத்தாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











