என்ன ஆன்ட்டி இதெல்லாம்.. ஸ்கூல் பசங்க போல.. நடிகையின் டாட்டூவை பார்த்து பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கையில் காதலர் பெயரை பச்சைக்குத்தியுள்ள நடிகையை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

Recommended Video

அம்மா Vanitha Vijayakumar-ன் 3-வது Marriage-க்கு வாழ்த்துச்சொல்லும் மகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயக்குமார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, மூன்றாவது திருமணம் செய்ய உள்ளார்.

விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை வரும் 27 ஆம் தேதி காதல் திருமணம் செய்ய உள்ளார் வனிதா. பெற்றோருடன் எந்த ஒட்டும் இன்றி உறவும் இன்றி உள்ளார் வனிதா.

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய உள்ளார். அவரது திருமண அழைப்பிதழ் அண்மையில் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலானது. அதனை தொடர்ந்து தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வனிதா.

மகளின் பதிவு

மகளின் பதிவு

வனிதா வெளியிட்ட பிரஸ் ரிலீஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அவரது மகளான ஜோவிகா, தனது தாயின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவும் வைரலானது.

கைகளில் டாட்டூ

கைகளில் டாட்டூ

இந்நிலையில் நடிகை வனிதா, தனது கையில் தன்னுடைய காதலரான பீட்டர் பாலின் பெயரை டாட்டூ வறைந்துள்ளார். இதேபோல் பீட்டர் பாலும் தனது கையில் வனிதாவின் பெயரை டாட்டூ வறைந்துள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வச்சு செய்கின்றனர்

வச்சு செய்கின்றனர்

மேலும் அந்த போட்டோவை நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். காதலின் அடையாளம் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

ஸ்கூல் பசங்க மாதிரி

ஸ்கூல் பசங்க மாதிரி

வனிதா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்பா.. டேய்.. முடியலடா.. என்னங்கடா ஸ்கூல் பசங்கள் மாதிரி பண்ணிட்டு சுத்துறீங்க.. என கேட்டு பங்கம் செய்துள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், இது பர்மனன்ட்டா அல்லது தற்காலிகமான டாட்டூவா என கேட்டுள்ளார்.

என்ன ஆன்ட்டி இதெல்லாம்?

என்ன ஆன்ட்டி இதெல்லாம்?

மற்றொரு நெட்டிசனான இவர், என்ன ஆன்ட்டி இதெல்லாம் என கேட்டு கிண்டலடித்துள்ளார். மற்றொரு நெட்டிசன், என்ன.. இதை பார்த்தவுடன் வடிவேலு டயலாக்குதான் ஞாபகம் வருகிறது.. என்ன சிம்ரன் இதெல்லாம் என கேட்டுள்ளார்.

பார்ட்னர் தேவை

பார்ட்னர் தேவை

அதே நேரத்தில் பல நெட்டிசன்கள், துணிச்சலான பெண்.. துணிச்சலான முடிவு என புகழ்ந்துள்ளனர். பலரும் வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த வயதில் பெண்களுக்கு பார்ட்னர் தேவை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X