தினமும் எனக்கு பெண் தேவை.. அது Breakfast சாப்பிடுற மாதிரி.. பிளே பாய் போல பேசும் பப்லு!
சென்னை: தினமும் எனக்கு பெண் தேவை என்று பேட்டி ஒன்றில் நடிகர் பப்லு வெளிப்படையாக பேசியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
57 வயதான பப்லு தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை அவர் மீடியாவிற்கு அறிமுகப்படுத்தியது முதல் பல விதமான சர்ச்சையில் சிக்கினார்.

இதையடுத்து, என்னைப் பார்த்தால் வயசானவன் மாதிரியா இருக்கு என்று பேசி மேலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இளம் காதலி ஷீத்தல்: இதன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அண்மையில் பப்லுவின் பிறந்த நாளில் இளம் காதலி ஷீத்தல் கலந்து கொள்ளாதது, ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது.
பிரிந்தனர்: இருவரும் பிரிந்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் போட்டோக்களை டெலிட் செய்து விட்டதால், இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்தி காட்டுத்தீபோல பரவியது. இதுகுறித்து பேட்டி அளித்த பப்லு, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த கேள்விக்கும் நான் பதில் அளிக்க மாட்டேன் என்றார். ஆனால், எல்லாம் கொடுத்த கடவுள் என்னை தொங்கலில் விட்டுவிட்டார் என்று வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
சரமாரி கேள்வி: ஷீத்தலை பிரிந்தது குறித்து யூடியூப் சேனலில் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் பப்லு, இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை சொல்லாமல் மழுப்பி வரும் போதும், செய்தியாளர்கள் அவரை வளைத்து வளைத்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
Breakfast மாதிரி: அதில், இந்த வயதில் எனக்கு பெண் தேவையா என்று கேட்கிறார்கள், அதற்கு நான் ஏற்கனவே பதில் கொடுத்து இருக்கிறேன் எனக்கு பெண் தேவை தான், அது எனக்கு Breakfast சாப்பிடுற மாதிரி, நான் தினமும் Breakfast சாப்பிடுவேன், நான் நல்ல ஆரோக்கியமா இருக்கேன், அதனாலத்தான் என்னால் உடம்பை இப்படி வைத்து இருக்க முடிகிறது. கடவுள் எனக்கு நிறைய சக்தியை கொடுத்து இருக்கிறார் என்று பேசி உள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் வகையில் பலர் அவரை திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications