விஜய்யின் சேலம் கூட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பனையூருக்கு போங்கப்பா.. விளாசும் நெட்டிசன்ஸ்
சேலம்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் மிகவும் கணிசமான அளவிலேயே தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். குறிப்பாக மாதம் ஒரு பொதுவெளி மீட்டிங், ஒரு அரங்க மீட்டிங் என கலந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில் சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன் கூட்டியே தவெக தரப்பில் காவல்துறையிடம் மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை அனுமதி கேட்டிருந்தனர்.
காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்திலேயே நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெய்யிலின் காரணமாக சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவருக்கு முதலில் மூச்சுத் திணறல் ஏற்படவே, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு முதலுதவி அளித்தும் பலன் இல்லாமல் உயிரிழந்தார்.

நெட்டிசன்கள் கோபம்: இது தொடர்பான தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் ஏன் மாலை நேரத்தில் அனுமதி வாங்கவில்லை என்று கேள்வி எழுப்பிகிறார்கள். மேலும் சிலரோ, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் வாங்கவும் இழப்பீடு வாங்கவும் விஜய்யைச் சந்திக்க பனையூருக்குப் போங்க என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் இந்த அளவுக்கு காட்டமாக விமர்சிக்க காரணமே விஜய்யின் கடந்த கால நடவடிக்கைகள் தான். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற இவரது கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் மூச்சுத் திணறி, உடல் நசுங்கி மரணம் அடைந்தனர். இந்த கோர சம்பவத்தைப் பார்த்து மொத்த இந்தியாவுமே அதிர்ச்சி அடைந்தது. தவெகவினர் இது திமுகவின் சதி என்று விமர்சித்தனர். ஆனால் அவர்கள் விமர்சித்ததற்கு ஏற்ற ஒரு ஆதாரம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை.
பிளானிங்: இது தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வுத்துறையில் விசாரணையில் உள்ளது. கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் மற்றும் அவரது கட்சிக்காரர்களின் மெத்தனப்போக்குதான் என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் கரூர் சம்பவத்திற்குப் பின்னர் மிகவும் கவனமாகவே விஜய் தனது கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாண்டிச்சேரி மற்றும் ஈரோட்டில் நிகழ்ச்சி நடத்தும் போது, முற்பகலிலேயே நடத்தி முடித்துவிட்டார். ஆனால் சேலத்தில் மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரைக்கும் தான் தவெக தரப்பில் அனுமதி கேட்டுள்ளனர்.
காட்டமான விமர்சனம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்துஅவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஆறுதல் கூறி, நஷ்ட ஈடாக ரூபாய் 20 லட்சம் அளித்தார். அதேபோல், சேலம் பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினரையும் தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறுவார் என்று காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











