விதிகளை மீறிய விஜய் & ரசிகர்கள்.. வெரி ஸ்மார்ட்னு நினைப்பா? விஜயை விளாசும் இணையவாசிகள்

மலேசியா: விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இணையத்துக்குள் நுழைந்தாலே இது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் புகைப்படங்களும் தான் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கிறது. இப்படி இருக்கும்போது இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் அவரது ரசிகர்கள், விழாவை ஏற்பாடு செய்தவர்களை கடுமையாக சாடி வருகிறார்கள்.

விஜய் நடிகர் மட்டும் இல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார். இப்படி இருக்கும்போது, இந்த இசை வெளியீட்டு விழாவில், மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்தது. விஜய் பேசும்போது, எக்காரணம் கொண்டும் அரசியல் பேசக்கூடாது. அதேப்போல், நிகழ்ச்சில் கலந்து கொள்ள வரும் விஜய் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை, கட்சி கொடி, தொப்பி, டீ சர்ட், பேட்ச், குடை மற்றும் கட்சி கொடி நிறத்தை பிரதிபலிக்கும் எதையும் அணிந்து வரக் கூடாது. கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

மீறி கொண்டு வந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் தெளிவாக கூறி இருந்தது. இதனால் ரசிகர்கள் நிகழ்ச்சியில் எந்தவிதமான சச்சரவுகளும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று, விதிமுறைகளை பின்பற்றி வந்திருந்தனர். இதில், ஒரு ரசிகர் மட்டும் மறைத்துக் கொண்டு வந்த தவெக கொடியை எடுத்து அசைத்தார். அவரைப் பார்த்ததும் மலேசியா காவல்துறை," தம்பி, வாங்க.. உங்க பேரு என்ன? இந்த சேட்டைதான் செய்யக்கூடாதுனு சொன்னோமே? ஸ்டேஷனுக்குப் போலாமா" என்பது போல அந்த ரசிகரை லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் முன் கைது செய்து அழைத்துச் சென்றது.

Netizens Slams Vijay And His Fans For They Broke The Malaysia Govt Rules During Jana Nayagan Audio Launch

விஜய் ரியாக்‌ஷன்: ரசிகர்கள் TVK.. TVK.. என்று கத்தும் போது கூட, விஜய், இங்கு வேண்டாம், என்று தெரிவித்தார். ஆனால் ரசிகர்கள் விஜயை விமர்சிக்க காரணமே, நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களின் கைகளில் ஒட்டப்பட்ட, ஸ்மார்ட் பேட்ச்கள் தான். அதாவது, மைதானத்தில் உள்ள மூன்று ரேக்குகளில், முதல் மற்றும் மூன்றாவது ரேக்கில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு கைகளில் சிவப்பு நிற விளக்கு ஒளிரும் பேட்களும், இரண்டாவது ரேக்கில் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு மஞ்சள் நிற விளக்கு ஒளிரும் பேட்ச் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மூவா?: அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தை பிரதிபலிக்கும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் விளக்குகள் அனைத்தும் ஆஃப் செய்யப்பட்ட பின்னர் ரசிகர்கள் அணிந்திருந்த பேட்ச், தவெக கொடி நிறத்தில் பிரதிபலித்தது. இது தொடர்பான வீடியோக்கள் வேகமாக பரவிய போது கூட, இணையவாசிகள் விஜயின் உதவியாளர் ஜெகதீஸ் செம ஸ்மார்ட்டாக இந்த விஷயத்தைச் செய்துவிட்டார் என்று கமெண்ட் போட்டார்கள்.

விமர்சனம்: இப்படி இருக்கும்போது மலேசிய அரசு விதித்த விதிகளை மீறி விட்டார்கள். இதற்கு விஜயும் உடந்தையா என்று எல்லாம் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல் பிரபுதேவா, நடனம் ஆடும் போது கூட, அவருடன் நடனமாடிய டான்சர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காம்பினேஷன் உடையை அணிந்திருந்தார்கள். மலேசியா அரசு விதித்த விதிகளை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தொடங்கி, விஜய் ரசிகர்கள் வரை மீறிவிட்டனர். இது விஜய்க்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்று எல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X