விஜய்யின் தவெக செய்த தவறுகள் என்னென்ன? தொடர்ந்து பறிபோகும் அப்பாவி உயிர்கள்.. சுட்டிக் காட்டும் நெட்டிசன்ஸ்

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகள், தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என நடத்தி உள்ளது. நடத்திக் கொண்டும் உள்ளது. இதுவரை சுமார் 50 பேர் வரையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் கோர சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அப்படி இருக்கையில் இன்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தி பேசினார் விஜய்.

இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஓருவர் பலியான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் போன்ற கோர சம்பவத்தின் 41 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் அதன் பின்னர் தவெகவினர் நடத்தும் கூட்டங்களில் மிகவும் கவனமாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் கூட்டத்திலும் இருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் மற்றும் தவெகவினர் பாடம் கற்க இன்னும் எத்தனை உயிர்களை தமிழ்நாடு பலி கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் விஜய் மற்றும் தவெகவினர் செய்த தவறுகள் என்னென்ன, அவர்கள் எதைத் தவிர்த்திருக்கலாம், எதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Netizens Slams Vijay And His TVK Party Do and Don ts after Salem Deaths

அதாவது தவெக ஏன் கூட்டத்தை நண்பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை நடத்துகிறோம் என்று கேட்டு அனுமதி வாங்கினார்கள்? கூட்டத்தை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் நடத்தி இருந்தால் வெயில்லே இருந்திருக்காது. இதனால் மக்கள் சோர்வடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மதிய நேரத்தில் நடத்த திட்டமிட்டதே தவறு. அப்பாவி மக்களும் விஜய்யைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்து நீண்ட நேரம் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

மதிய நேரம்: கட்சியினருக்கு ஏன் சேர் போடவில்லை? சேர் போட்டிருந்தால் பலரும் அதில் அமர்ந்திருந்துப்பார்கள். மதிய நேரத்தில் நடத்துவது முன்கூட்டியே தவெகவினர் திட்டமிட்டது தானே? அப்படி என்றால் ஏன் நிழலுக்காக பெரிய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தொப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர்தான் தொப்பிகள் அணிந்திருந்தனர்.

Netizens Slams Vijay And His TVK Party Do and Don ts after Salem Deaths

பாதுகாப்பு மற்றும் சௌகரியம்: முதலில் இந்த எண்ணமும் மாற்றமும் விஜய்யிடம் வரவேண்டும் என்று விமர்சித்துள்ள ஒரு நெட்டிசன் விஜய்க்கு சொல்லியுள்ள அட்வைஸ் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக பொதுக்கூட்டங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் அது நேரடியாக விஜய்யை தான் பாதிக்கிறது. அப்படி இருக்கையில் தனது கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பு, சௌகரியம் உள்ளிட்டவற்றில் விஜய் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. தனது காருக்குப் பின்னால் இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்தவர்களை நோக்கி விஜய் கையசைத்துக் கொண்டே வந்தார். ஆனால் அவர்களைக் கண்டிக்கவில்லை.

Netizens Slams Vijay And His TVK Party Do and Don ts after Salem Deaths

திமுக மீது பழி: கரூர் சம்பவத்தில் திமுக மீது குற்றம் சொன்ன தவெகவினர் இம்முறையும் திமுக மீதே குற்றம் சுமத்த போகிறார்களா? இல்லை பறிபோன உயிர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்களா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். என்னதான் விஜய் மற்றும் தவெக தரப்பில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். விஜய் வாகனத்தை பின் தொடருவது, அவரது காரை நோக்கி ஓடி நெரிசலை உருவாக்குவது உள்ளிட்ட செயல்களைச் செய்யக் கூடாது. நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியுள்ளவை விஜய் தரப்பிலும் தவெகவினர் தரப்பிலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Netizens Slams Vijay And His TVK Party Do and Don ts after Salem Deaths

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X