ஊருக்கே தெரியும் யாரு அந்த நடிகைன்னு.. விஜய் - சங்கீதா விவாகரத்து.. நெட்டிசன்கள் இப்படி இறங்கிட்டாங்களே!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே சங்கீதா அவருடன் எந்தவொரு நிகழ்ச்சியிலும் மாநாடு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அட்லியின் வளைகாப்பு விழா மற்றும் கடைசியாக மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கூட சங்கீதா மற்றும் அவர்களது குழந்தைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பல பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், ரவி மோகன் என பல பிரபலங்களின் விவாகரத்து பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின.

விஜய் மற்றும் சங்கீதா விஜய் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்வதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையிலும், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அதை மறுத்தே வந்த நிலையில், தற்போது சங்கீதா விஜய் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் பட அறிவிப்பு வந்தாலே ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடுவார் விஜய். அவரது விவாகரத்து பஞ்சாயத்து வெடித்துள்ள நிலையில், இந்தியளவில் டிரெண்டாகி உள்ளார்.
நடிகையின் பெயரை தேவைப்பட்டால் சொல்வேன்: சங்கீதா விஜய் தனது மனுவில் நடிகையுடன் விஜய்க்கு இருந்த திருமண உறவை மீறிய தொடர்பு குறித்து மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில், விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தால் கண்டிப்பாக அந்த நடிகையின் பெயரையும் சொல்லத் தயங்கமாட்டேன் என சங்கீதா விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊருக்கே தெரியுமே: இந்நிலையில், சங்கீதா விஜய் மற்றும் விஜய்யின் குடும்ப வாழ்க்கை பிரியவே அந்த பிரபல நடிகை தான் காரணம் என்பது ஊருக்கே தெரியுமே என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் நடிகையின் பெயரையும் போட்டோக்களையும் ஷேர் செய்து தவெக தலைவர் விஜய்யின் மொத்த இமேஜையும் டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் பெரிய இடி: திமுகவை எதிர்த்து தொடர்ந்து விஜய் அரசியல் மேடைகளில் பேசி வந்த நிலையில், கண்டிப்பாக பெண்கள் ஓட்டு விஜய்க்கு அதிகம் என சமீபத்தில் புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், கடைசியாக பிரம்மாஸ்திரம் போல விவாகரத்து பஞ்சாயத்தும் விஜய்க்கு எதிராக பெரிய இடியாக வந்து இறங்கியுள்ள நிலையில், அரசியல் களத்திலும் அவருக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படும் என நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications