தலையை விரித்துப் போட்டு ரசிகை செய்யும் அலப்பறை.. மலேசியாவிலும் விஜய் மானத்தை வாங்குறாங்களே
மலேசியா: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மாலை மலேசியாவில் நடைபெற உள்ளது. இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகை ஒருவர் விஜய் மலேசியாவுக்கு வந்தடைந்தது குறித்து ஆர்வத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்தது மட்டும் இல்லாமல் கண்டனங்களுக்கு ஆளாகி உள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில், உருவாகி உள்ள ஜன நாயகன் படம் விஜயின் கடைசி படம். இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் இசை வெளியீட்டு விழாவை விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி போல நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். இப்படி இருக்கும்போது ரசிகர்களும் ஆர்வத்துடன் மலேசியாவுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் இருக்கும் விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டும் இல்லாமல், மற்ற நாடுகளில் உள்ள விஜய் ரசிகர்களும் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தனது தாய் உடன் புறப்பட்டு மலேசியாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விஜய் மலேசியாவுக்கு சென்றடைந்தது தொடர்பாக பல வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கும்போது ரசிகை ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ரசிகை: அதாவது ரசிகை ஒருவர் ஆர்வக்கோளாறில் பேசுகையில், " தளபதி கச்சேரி.. தளபதி என்று சொல்லிவிட்டு கத்துகிறார். எனக்கு தளபதி என்றால் வெறியாகுது. தளபதி மலேசியாவுக்கு வந்துவிட்டார். உண்மையைச் சொல்கிறேன், இது போன்ற உணர்வுகள் எல்லாம் அபிமான ரசிகர்களுக்கு மட்டும் தான் இருக்கும். எனக்கு அப்படித்தான். நாளைக்கு கூத்து காட்டப் போகிறார்கள்.
அநியாயம்: அப்போதுதான் சண்டை வரும், மைதானத்திலேயே அடித்துக் கொள்வார்கள். டிக்கெட் மிஸ் ஆகிவிட்டது என்று அழுவார்கள். அப்போதுதான் நாங்கள் நடனமாடிக் கொண்டு இருப்போம். வரிசையில் நிற்பதில் பிரச்னை வரும், அதில் தள்ளுவது, அடித்துக் கொள்வது, முதுகில் குத்துவது என ஏராளமாக நடக்கவுள்ளது. எல்லாம் வரும் இது எல்லாம் தாங்கிக் கொள்வோம், நாளைக்கு இருக்கு அநியாயம்" என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
விமர்சனம்: அவரது இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், ரசிகையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாறான ரசிகர்களையும் மலேசியா காவல்துறை கையாள வேண்டி உள்ளதே என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் விஜய் மானத்தை மலேசியாவிலும் வாங்கப் போகிறார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











