Vijay: பாபா படம் ஓடாத போது ட்ரீட்.. தக் லைஃப் பிரச்னைக்கு கப்சிப்.. விஜயும் லேசு பட்டவர் இல்ல போலயே?

சென்னை: விஜயின் ஜன நாயகன் படம் நாளை வெளியாகாது என்று உறுதி ஆன பின்னர் திரைத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதில் பலரும் எழுப்பும் கேள்வி, நடிகர்கள் ரஜினி, கமல் ஏன் இதுவரை வாய் திறக்காமல் உள்ளார்கள் என்பதுதான். இப்படி இருக்கையில் பத்திரிகையாளர் அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில், ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே என ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

இப்படி இருக்கும்போது, அந்தணனின் பழைய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் கடந்த காலங்களில் எப்படி நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ள வீடியோ துணுக்கைப் பகிர்ந்து அந்தணனுக்கு எதிராகவும், நடிகர் விஜய்க்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Netizens Slams Vijay For He Never Support Kamal Films Issue And Celebrates Rajini Baba Failure
Photo Credit:

அதாவது, அந்த அந்தணன் அந்த வீடியோவில், " பாபா படம் ஓடாத போது நடிகர் விஜய் பார்ட்டி வைத்து எல்லாம் கொண்டாடி உள்ளார். என்ன எப்போது பார்த்தாலும் ரஜினியே முதல் இடத்தில் இருக்கிறார் என்று அந்த பார்ட்டியை விஜய் நடத்தினார்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள இணையவாசி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இணையதள வாசிகள் மத்தியில் கவனம் கிடைத்துள்ளது.

கேள்வி மேல் கேள்வி: அதாவது, ஜன நாயகன் படம் வெளியாகவில்லையே என்று மக்கள் எதற்காக குரல் கொடுக்க வேண்டும்? இதுவரை எந்த நடிகரின் படத்திற்காவது நடிகர் விஜய் குரல் கொடுத்துள்ளாரா? தக் லைஃப் படத்தின் பிரச்னையின் போது கர்நாடகாவில் படம் வெளியாகவில்லையே, அப்போது விஜய் குரல் கொடுத்தாரா? பாபா படம் ஓடாததற்கு ட்ரீட் வைத்து கொண்டாடியதாக கூறுகிறார்கள், அப்படிப்பட்டவருக்கு எதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Netizens Slams Vijay For He Never Support Kamal Films Issue And Celebrates Rajini Baba Failure
Photo Credit:

இணையவாசிகள்: மேலும் இதைப் பார்த்த பலரும் விஜய் கடந்த காலங்களில் ஏதோ லேசு பட்டவர் இல்லை போலயே என்றும் விமர்சித்து வருகிறார்கள். ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இதனால் படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X