Pongal 2026: ஓவர் சீன் போட்ட ஜன நாயகன்.. காரியத்தில் கண்ணாக இருந்த பராசக்தி.. இணையவாசிகள் விளாசுறாங்களே!
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜயின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி என இரண்டு படங்கள் வெளியாவதாக இருந்தது. இரண்டு படங்களின் படக்குழுக்களும் படத்தின் புரோமோசனிலும் தியேட்டர்களை புக் செய்வதிலும் தீவிரம் காட்டி வந்தார்கள். இரண்டு படங்களுக்கும் சென்சார் வழங்குவதில் பிரச்னை இருந்து வந்தது. இப்படி இருக்கையில், ஜன நாயகன் படத்தால் அவர்கள் குறிப்பிட்ட 9 ஆம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் வாங்க முடியவில்லை. இதனால் ரிலீஸ் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. ஆனால் பராசக்தி படக்குழு சென்சார் சான்றிதழை வாங்கி படத்தை ரிலீஸ் செய்யப்போகிறது. இது தொடர்பாக இணையவாசிகள் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஜன நாயகன் படக்குழுவோ தங்களுக்கு சென்சார் வழங்க வேண்டும் என்றும் சென்சார் நிறுவனம் வேண்டும் என்றே கால தாமதம் செய்வதாகவும், நாங்கள் ஜனவரி 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக உலகத்திற்கே உரக்கச் சொல்லி விட்டோம், ஆனால் சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தொடக்கதில் ஜன நாயகன் படக்குழு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று குட்டு வைத்தது. ஒரு வழியாக இன்று காலை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்சார் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

சாதித்த பராசக்தி: ஆனால் பராசக்தி குழு கப்சிப் என காரியத்தில் கண்ணாக இருந்து சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டது. மேலும் படம் நாளை வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இணையவாசிகள் பலரும் ஜன நாயகன் படக்குழு ஓவர் சீன் போட்டு, ரசிகர்கள் மத்தியில் ஹைப் ஏற்றி விட்டு, ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால் பராசக்தி படக்குழு படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்கிறது என்று பேசி வருகிறார்கள்.
இணையவாசிகள் கருத்து: இதில் ஒரு இணைய வாசி ஓபனாகவே ஜன நாயகன் படக்குழுவை விமர்சித்தும், பராசக்தி படக்குழுவை பாராட்டியும் பதிவிட்டுள்ளார். அதாவது, " ஜன நாயகன் சென்சார் பண்ணாம இழுத்தடிச்சா, பராசக்தி-க்கு சென்சார் பண்ணி சர்டிபிகேட் குடுக்குறதுல இழுத்தடிச்சுட்டே இருந்தது சென்சார் போர்ட். படக்குழு நிதானமா கேண்டில் பண்ணி சைலண்டா சர்டிபிகேட் வாங்கிட்டு வந்திருக்கு. காரியத்துல கண்ணா இருந்து வேண்டியதை வாங்கிட்டு நாளைக்கு ரிலீசையும் உறுதி செஞ்சுட்டாங்க. அண்ணன் - தம்பி பொங்கலா இருந்தது இப்போ சூழ்நிலையால் தம்பி பொங்கலா அமைஞ்சுருக்கு.

தமிழ் தீ பரவட்டும்: U/A சர்டிபிகேட் கொஞ்சம் சங்கட்டம் தான். ஏன்னா சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம். இப்போ 16 வயசுக்கு மேற்பட்டவர்கள் தான் அனுமதிக்கப்படும்னு ஒரு சர்டிபிகேட் வாங்கினதை கண்டிப்பா சில தியேட்டர்கள் கடைபிடிக்கும். அது கொஞ்சம் சிக்கலா இருந்தாலும் படத்தோட கன்டென்ட் வலுவானது-ன்னு நம்பி களத்துக்கு வருது டீம். சம்பவம் உறுதி, கண்டிப்பாக தீ பரவும். தமிழ் தீ பரவட்டும் " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, பராசக்தி படத்தின் புக்கிங் வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











