இன்னுமா ஆண்டவரே சொல்லல.. நேத்தே உலகம் முழுவதும் தெரிஞ்சு போச்சு.. கமலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பா வீட்டில் இருந்து சனம் ஷெட்டி நேற்றே வெளியேறிவிட்டார் என்று தகவல் பரவி வரும் நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சனம் ஷெட்டி, நேற்றே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் இன்றைக்கான புரமோவில் சனம் ஷெட்டி வெளியேறுவது குறித்த தகவலை சஸ்பென்ஸாக காட்டி புரமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

உலகம் முழுக்க தெரிஞ்சுடுச்சு
அடடா இன்னுமா ஆண்டவரே யார்னு சொல்லவில்லை?..... சனம்தான்னு சட்டுனு.. சொல்லுங்க... நேற்றே உலகம் முழுவதும் தெரிஞ்சுபோச்சி!. என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

அந்த அளவுக்கா முட்டாள்?
எந்த மாதிரி மக்கள் ஷிவானிக்கு வோட் பண்ணுறாங்க.. ஒத்துக்குறேன் சோசியல் மீடியா வேற ஹோம் ஆடியன்ஸ் வேற.. ஆனா என்ன தான் இருந்தாலும் ஷிவானி எல்லாம் இருக்கணும்னு நினைக்குற அளவுக்கு முட்டாளுங்களாவ இருப்பானுங்க சில நியூட்ரல் ஆடியின்ஸ் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

துள்ளி குதிச்சாளுகதானே..
போனவாரம் ஜித்தன் ரமேஷ் சேவ்ன்னு சொன்னதும் சந்தோஷத்தில துள்ளி குதிச்சாளுகதானே நீங்க என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆக்ஷன்.. ரியாக்ஷன்
அர்ச்சனா மற்றும் நிஷாவின் ரியக்ஷன்களை பார்த்த இந்த நெட்டிசன், ஆக்சன்... ரியாக்சன்... இங்கு கற்று கொடுக்கப்படும்! என பதிவிட்டுள்ளார்.

கேஸ் போடுவாங்க..
சனம் ஷெட்டி வெளியில வந்ததும் ஓட்டிங்ல சதி நடந்திருக்கிதுன்னு அவங்ககிட்ட சனம் ஷெட்டி ஆர்மி சொல்லுவாங்க.. அப்புறம் என்ன.. விஜய் டிவி மேல சனம் கேஸ் போடுவாங்க.. நடக்கட்டும்.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ரூட்டு க்ளீயர்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா மைண்ட் வாய்ஸ் என அடேங்கப்பா... இது நம்ம லிஸ்ட் லையே இல்லையே...
சனமையே எவிக்ட் பண்ணிட்டானுங்க.. அப்பாடா இனி நம்ம ரூட்டு க்ளீயர் என்று பதிட்டுள்ளார்.

விஜய் டிவி புராடெக்ட்ஸ்
புரமோவை பார்த்த இவர் விஜய் டிவி புராடெக்ட்ஸ் 7 பேர்ல இன்னும் ஒருத்தர் கூட போகல. வெளிய போனவங்கள விட இவங்கல்லாம் அவ்ளோ நல்ல பிளேயர்ஸா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பயில்வானால் வந்த பங்கம்
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஐி என்கிற பயில்வானை கொண்டு வந்ததன் விளைவு மிக கேவலமான ஒரு நிகழ்ச்சியாக இந்த ஷோவை உலகத்தமிழர்கள் பார்க்கின்றார்கள் என்று கூறியுள்ளார்.

நீங்களும் உங்க ஷோவும்
இந்த நெட்டிசன், மொத்தமா விளையாடறது அந்த வீட்டுல நாலு பேருதான் அதுல ஒருத்தர் ஏற்கனவே வெளியில போய்ட்டாரு இப்ப சனம் அடுத்து இருக்கிற இரண்டு பேரையும் வெளியே அனுப்பிட்டா விஜய் டிவி ஆளுங்கள அப்படியே பைனல்ஸ் கொண்டுபோய் அதுல இருக்கிற யாரையாவது வின் பண்ண வைத்துவிடலாம் போங்கடா நீங்களும் உங்க ஷோவும் என விளாசியுள்ளார்.

சந்தோஷமா இருக்கும்
அர்ச்சனா, நிஷா ஆகியோரின் ரியாக்ஷனை ஷாக் ஆகுற மாதிரி நடிக்குதுங்க. உள்ளுக்குள்ள சந்தோசமா இருக்கும்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











