பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஃபாத்திமா பாபு.. என்ன சொல்றாங்க நெட்டிசன்ஸ்?
Recommended Video
சென்னை:பிக்பாஸ் வீட்டில் இருந்து ஃபாத்திமா பாபு நேற்று வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நுழைந்தவர் ஃபாத்திமா பாபு. இந்நிலையில் முதல் ஆளாக அவர் நேற்று வெளியேற்றப்பட்டார். ஃபாத்திமா பாபுவுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் இருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சண்டையை விரும்பாத ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் பயன் இல்லை என நினைத்தும் டிஆர்பி ரேட்டிங்குகாகவும் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேர்மையான போட்டியாளர்
ஃபாத்திமா பாபு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.. சாக்ஷி அகர்வால் அல்லது மீரா மிதுனைதான் நான் எதிர்பார்த்தேன். டிஆர்பிக்காக மீண்டும் ஒரு வித்தை.. போட்டியாளர்களில் ஃபாத்திமா பாபு மிகவும் நேர்மையான போட்டியாளர்.. உங்கள் அணுகுமுறையும் ரத்தினங்களைபோல் தூய்மையாக இருந்தது என்கிறார் இந்த நெட்டிசன்.
என்ன நடந்தது?
ஓட்டை பிரிப்பது உதாவது என நாங்கள் நினைத்தோம்.. நான் சரவணன்தான் வெளியேறுவார் என்று நினைத்தோம், ஏனெனில் பலர் ஃபாத்திமா பாபுக்கு வாக்களிப்பதை பார்த்தேன்.. என்ன நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் இந்த நெட்டிசன்.
இன்னும் இருந்திருக்கலாம்
பிக்பாஸ் வீட்டில் நீடிக்க தகுதியானவர் ஃபாத்திமா பாபு.. எல்லோரைப் பற்றியும் துல்லியமாக அனாலிஸிஸ் செய்தார். அவர் இன்னும் கொஞ்ச நாள் வீட்டிற்குள்ளேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் இவர்.
வெளியேறினார்
பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நுழைந்தார். முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அழகான விஷயங்கள் உள்ளன
ஃபாத்திமா பாபு நீங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம்! உங்களைப் போன்ற உண்மையான நபர் அந்த வீட்டில் இருக்கக்கூடாது, உள்ளே சில பொறாமை கொண்டவர்களுடன் இருப்பதை விட வெளியில் பார்க்க உங்களுக்கு அழகான விஷயங்கள் உள்ளன! நீங்கள் சிறந்த போட்டியாளர்!
துல்லிய அனாலிஸிஸ்
கமல்ஹாசனுடன் விக் என்ட்.. இறுதியாக ஃபாத்திமாபாபு வெளியேற்றப்பட்டார், கமல் கேட்டபோது அனைவரையும் பற்றி அவர் நன்றாகவே கூறினார். வனிதா வீட்டிற்குள் இருக்கும் அனைவரையும் உண்மையில் ஆதிக்கம் செலுத்துகிறார், விரைவில் வெளியே வருவாள் என்று நம்புகிறேன்.. அவர் விஜய் டிவி திட்டத்தின்படி நீண்ட நாட்கள் இருக்கலாம்.. இவ்வாறு இந்த நெட்டிசன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











