Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எல்லா புரமோவிலேயும் ஆரியை வில்லனா காட்றீங்களே.. அது ஏன்? விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான 5வது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரியோ முதலிடத்தையும் பாலாஜி இரண்டாவது இடத்தையும் பெறுவது தெரியவந்தது.
அப்பாவின் மரணத்திற்குப் பிறகு லாஸ்லியாவின் முதல் போட்டோஷூட்!
இதில் பாலாஜி, ஆரியிடம் டிஸ்ட்ராக்ட் பண்ணாதீங்க புரோ என்றும் கூறுகிறார். இதனை பார்த்த ஆரி ரசிகர்கள், ஏன் ஒவ்வொரு புரமோவிலும் ஆரியை வில்லனை போல் காட்டுகிறீர்கள் என விளாசி வருகின்றனர்.
ஆரியை கெட்டவராக காட்ட
நேற்றை புரமோவிலும் ஆரி, ஆம்பளை பையன்தானே ஓடி பிடிச்சு விளையாடு என்று கூறியதை ஆம்பளையா என்று கேட்பதை போல் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர். வின்னர் யார் என்று டிசைட் செய்து விட்டு ஆரியை கெட்டவராக காட்ட முயற்சி செய்கிறீர்களா என கேட்டு வருகின்றனர்.
வெல்டன் ரியோ
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ கடந்த 2 வாரங்களாக அவரது முழு ஸ்கில்லையும் காட்டி வருகிறார்.. வெல் டன்.. என பதிவிட்டுள்ளார்.
ஆரியை வில்லனாக..
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்களுடைய எல்லா புரமோவிலும் ஆரியை வில்லனாக காட்றீங்களே.. அப்போதான் மக்கள் பாலாஜி சொன்னா மாதிரி ஆரி ரொம்ப கெட்டவர். பாலாஜி ரொம்ப நல்லவர் பாருங்கன்னு புரமோட் பண்றீங்க.. இப்போ விஜய் டிவி செலிபிரிட்டிஸும் ரியோவுக்கு ஓட்டு கேட்டு புரமோட் பண்றாங்க.. இதுலே ஆரிக்கு பிஆர்னு வேற குற்றச்சாட்டு... ஆரிக்குதான் உண்மையான ஆடியன்ஸ் சப்போர்ட் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஆரி புரோதான் வின்னர்
மற்றொரு நெட்டிசனான இவர் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் யாருக்கு டிக்கெட் கிடைத்தாலும் எனக்கு கவலையில்லை.. ஆரி புரோதான் வின்னர் எனும் போது என்ன நடந்தால் என்ன என்று பதிவிட்டுள்ளார்.
யாருடா கிரியேட்டிவ் கேம்ஸ் டீம்?
இன்றைய முதல் புரமோவில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன், அட ச்சை.. என்னடா டாஸ்க் கொடுக்குறீங்க? யாருடா கிரியேட்டிவ் கேம்ஸ் டீம்? என்று விளாசியுள்ளார்.
உங்களின் திட்டம் தெரிஞ்சுபோச்சு
புரமோவில் ரியோ வின் பண்ணுவதை பார்த்த இந்த நெட்டிசன், எல்லா டாஸ்க்கிலும் ரியோவே ஏன் வெற்றி பெறுகிறார். உங்களின் திட்டம் தெரிஞ்சு போச்சு.. அவர் முகத்தை பார்க்கவே எரிச்சலா இருக்கு.. இந்த சீசன்ல ஆடியன்ஸுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் பிரஷர்.. என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி முடிவு
ரியோ தான் வின்னர் என விஜய் டிவி முடிவு செய்து விட்டது. 80 நாட்கள் வரை குரூப்பிஸம் செய்து எல்லா நல்ல போட்டியாளர்களையும் வெளியே அனுப்பினார்.. அர்ச்சனா மடியில் படுத்து மாசாஜ் செய்துக் கொண்டார். இப்போது எல்லா விஜய் டிவி ஊழியர்களும் சீன் போடுறாங்க.. வெரி வொர்ஸ்ட் விஜய் டிவி இது உண்மையிலேயே ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.