இன்னும் எவ்ளோ நாள் தாலி செண்டிமெண்ட்ல பொழப்ப ஓட்டுவீங்க? சீரியலை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பெண்ணின் அனுமதியில்லாமல் ஹீரோ அவரது கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். இதனால் கண்ணீர் விட்டப்படி தாலி செண்டிமென்டுக்குள் செல்கிறார் அந்த ஹீரோயின்.

உயிரை வாங்குறீங்க

உயிரை வாங்குறீங்க

இந்த புரமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியையும் சீரியல் குழுவையும் விளாசி வருகின்றனர். புதிய சீரியல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரி நிஜத்துல நடந்தா அவனை ஊர்காரங்க எல்லாம் சேர்ந்து அடி வெளுத்துடுவாங்க. பொறுக்கித்தனம் பண்றவனை அந்த பொண்ணு திருத்தி சரி பண்ணுவா. ஏன்டா இப்படியெல்லாம் மட்டமா சீரியல் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க. இப்போ மெட்டி ஒலி ரீடெலிகாஸ்ட்டிங் கூட டெய்லி பாக்குறேன் அது சீரியல் என பதிவிட்டுள்ளார்.

மோசமான டயலாக்ஸ்

மோசமான டயலாக்ஸ்

மற்றொரு நெட்டிசனான இவர், மெட்டி ஒலி ஓகே, ஆனால் இப்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஃபேமிலியோட பார்க்க முடியுமா? அவ்வளவு மோசமா இருக்கு டயலாக்ஸும் சீன்ஸும். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலெட்சுமி ரெண்டு சீரியல்ஸும் பாருங்க.. என பதிவிட்டுள்ளார்.

செய்ய பிளான் பண்ணிட்ட

செய்ய பிளான் பண்ணிட்ட

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்ப புதுசா ஒன்னு ரெடி பண்ணி எங்க காதுலயே நல்ல செய்ய பிளான் பண்ணிட்ட என விளாசியுள்ளார்.

டேமேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க

டேமேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க

இந்த நெட்டிசன் அது என்னடா "தென்றல் வந்து என்னைத் தொடும்" இவ்ளோ நாள் பாட்டை தான் டேமேஜ் பண்ணிங்க.. இப்போ பாடல் வரிகளை டேமேஜ் பண்ணா ஆரம்பித்து விட்டீர்கள்? என கேட்டுள்ளார்.

மறுபடியுமா?

மறுபடியுமா?

சீரியலை பார்த்த இந்த நெட்டிசன், த்தூனு துப்பிடுவேன், கற்ற நாகரீகம் தடுக்குது. 20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பலாத்காரம் பண்ணிட்டா, முத்தம் குடுத்துட்டா, உடம்ப பார்த்துட்டா அவனுக்கே பொண்டாட்டி ஆகிடணும் கிற கிறுக்குத்தனம் இப்பதான் குறைஞ்சிருக்கு. இப்ப மறுபடியுமா!? லூசுக என விளாசியுள்ளார்.

பாரமா இருக்கீங்க!

பாரமா இருக்கீங்க!

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இந்த சீன் எடுத்தவன் வாழ தகுதியில்லாதவன். அத டெலிகாஸ்ட் பண்ற விஜய் டிவி உலகத்துக்கே தேவையில்லாத டிவி. எதுக்குடா நீங்களாம் உலகத்துக்கு பாரமா இருக்கீங்க! என திட்டி தீர்த்துள்ளார்.

தள்ளி வைக்கிறேன்

தள்ளி வைக்கிறேன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் விஜய் டிவி உன்ன 5️ வருஷம் டிவி லிஸ்ட்ல இருந்து தள்ளி வைக்கிறேன்டா.. என விளாசியுள்ளார்.

வழக்கு தொடுங்க..

வழக்கு தொடுங்க..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடே விஜய் டிவி என்னடா மக்களை காட்டுமிராண்டி காலத்துக்கு கூட்டிட்டு போறியா.. முற்போக்கு இயக்கங்கள் இந்த டிவி மேல வழக்கு தொடுங்க.. சட்டத்தை மீறுவது, பெண் அடிமைதனத்தை ஊக்குவிப்பதை செய்கிறான் இந்த விஜய் டிவி என விளாசியிருக்கிறார்.

Recommended Video

விரைவில் படம் இயக்க போறேன் | Actor Babloo Prithviraj chat | Filmibeat Tamil
கொலையா கொல்றீங்க..

கொலையா கொல்றீங்க..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடே டிவி தன் வயர்லயே தானே தூக்கு போட்டு தொங்குற அளவுக்கு கதை எழுதுறிங்கடா. எங்கல ஏன்டா இப்படி கொலையா கொல்லுறிங்க... என கேட்டுள்ளார்.

பொழப்ப ஓட்டுவீங்க?

பொழப்ப ஓட்டுவீங்க?

மற்றொரு நெட்டிசனான இவர், கேவலமான ஒப்பீடு. இருவர் மனமொத்து பிடித்து திருமணம் செய்வதும் எகத்தாளத்துக்கு ஒரு கயிற மாட்டிவிட்டு பொட்டு வச்சிட்டு போறதும் ஒன்னா? அறுத்து தூக்கிப்போட்டு போகவேண்டியதுதானே இதுக்கு ஒரு தொடரா? இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி பைத்தியக்காரத்தனமா தாலி செண்டிமெண்ட்ல பொழப்ப ஓட்டுவீங்க? என கேட்டுள்ளார்.

நேர்மறையான கதை களம்

நேர்மறையான கதை களம்

மற்றொரு நெட்டிசனான இவர் பிற்போக்குத்தனங்கள் நிறைந்துள்ள கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவது ஆரோக்கியனமானதாக அமையாது. நமது மகளிர்களை மீண்டும் பெண்ணடிமை தளத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டு நல்ல நேர்மறையான கதை களங்களை தேர்ந்தெடுத்து செயல்படுங்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X