பர்த் டே பேபி வருணுக்கு ஒரு புரமோ கூட போடாமல் ஏமாத்திட்டாங்க.. ஃபேமிலி உள்ளே வந்ததையும் காட்டலையே!
சென்னை: பிரியங்காவுக்கு ஏகப்பட்ட புரமோஷன் செய்யும் விஜய் டிவி வருண் பிறந்தநாள் அதுவுமா ஒரு புரமோ கூட போடவில்லையே என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
மேலும், வருணின் குடும்பம் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது உள்ளே வந்ததை கூட காட்டாமல் ஏன் மறைத்தனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்ளே வந்த வருணின் அம்மா மகாலக்ஷ்மி மற்றும் சகோதரர் அஸ்வின் வருணுக்கு தேவையான டிப்ஸ்களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

வருண் பிறந்தநாள்
பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மாமா ஐசரி கணேசன் தயாரிப்பில் வெளியான பப்பி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வருண் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டர் போட்டு வந்த கேக்கை அவரே ஸ்டோர் ரூமில் முதல் ஆளாக சென்று பார்த்தது வேற லெவல் என்டர்டெயின்மென்ட்

வீடியோவில் ஐக்கி, இமான்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வருணுக்கு ஸ்பெஷல் வீடியோ மெசேஜ் ஒன்றும் பிளாஸ்மா டிவியில் திரையிடப்பட்டது. வருண் குடும்பத்துடன் ஐக்கி பெர்ரி மற்றும் தனியாக இமான் அண்ணாச்சி வாழ்த்து கூறும் வீடியோக்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. வெறும் வீடியோ வாழ்த்து தான் என்பதால் தான் வருணின் புரமோ எதுவும் வரவில்லையா என நினைத்து இருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக வருணின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தது இன்பதிர்ச்சி கொடுத்தது.

வருணின் அம்மா
நல்லா கேம் விளையாடுற உன்னால் நானும் நம் குடும்பமும் பெருமை அடைந்து விட்டோம் என வந்ததும் மகனை கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்திய காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. அக்ஷராவும் தாமரையும் தான் வருணை நல்லா பார்த்துக்குறாங்க என்றும் பாராட்டினார்.

ராஜு பாய்
ஹவுஸ்மேட்கள் ஒவ்வொருத்தர் பற்றியும் வருண் அம்மா மற்றும் சகோதரர் எடுத்துக் கூறினர். சஞ்சீவ் முதல் நாளிலேயே வந்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும் என்றும் ராஜு பாய் என உங்க டைமிங் காமெடி குறைந்து விட்டது என நினைக்க வேண்டாம் இப்பவும் எப்ப பஞ்ச் கொடுக்கணுமோ கரெக்ட்டா கொடுக்கிறீங்க என பேசி ராஜுவுக்கும் எனர்ஜியை கூட்டி உள்ளனர்.

நான் ஸ்டாப் டாக்கிங்
ராஜு மற்றும் பிரியங்கா தான் இந்த சீசனில் என்டர்டெயின்மென்ட்டே இருவரும் ஒன்றாகவே அமர்ந்துள்ளனர் எனக் கூறிய வருணின் சகோதரர் வருண் போலவே மனதில் பட்டதை பட்டென பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். நான் ஸ்டாப் டாக்கிங் பிரியங்கா தான் எனக் கூறிய அஸ்வின் பிரியங்காவின் முகம் மாறுவதற்குள் அது நல்லது தான் நல்லா கேம் ஆடுறீங்க என்று சமாளித்து தப்பித்துக் கொண்டார்.
Recommended Video

ரசிகர்களுக்கு வருத்தம்
பாவனி உள்ளிட்ட ஹவுஸ்மேட்களின் பிறந்தநாளுக்கு தனி புரமோவும் அவர்கள் குடும்பத்தினர் வருகைக்கு தனி புரமோவும் போட்ட பிக் பாஸ் எடிட்டர் வருண் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் குடும்பத்தினர் வருகைக்கு ஏன் ஒரு புரமோ கூட போடவில்லை என்றும் பிரியங்காவுக்கு ஏன் தேவையில்லாமல் இரண்டு புரமோக்கள் அதுவும் மெயின் எபிசோடில் எடிட் செய்யப்பட்ட காட்சி ஏன் புரமோவாக போடப்பட்டது என்கிற கேள்வியை எழுப்பி திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











