உங்களுக்கு எல்லாம் மக்களை பார்த்து கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லையா? விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க் தற்போது மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், ஃபிரஷ்ஷாக கொடுக்கப்படும் டாஸ்க்கே மொக்கையாக இருக்கும். இதில் இது போன்ற பழைய டாஸ்க்குகளை கொடுத்து வெறுப்பேற்றுகிறீர்களே என விளாசியுள்ளனர்.

காலாவதியான டாஸ்க்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், காலாவதியான டாஸ்க்கையெல்லாம் வைத்து இப்போ கல்லாகட்டும் பிக்பாசு.. பலே கில்லாடியா இந்த பிக்பாசு! என விளாசியுள்ளனர்.

மகுடம் சூட்டப்போகும் மன்னன்..
ஆரி மன்னர் உடையில் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வெற்றி மகுடம் சூட்டபோகும் மன்னன் ஆரி அர்ச்சுனன்! பராக்! பராக்! என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இரக்கம் வரவில்லையா?
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்களுக்கு எல்லாம் மக்களை பார்த்து கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லையா? ஏன் மறுபடியும் இந்த மொக்கை டாஸ்க் வைத்து மக்களை கொலை செய்யுறீங்க? வொர்ஸ்ட் ஃபெலோஸ் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ட்ரை பண்றாரு..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படியோ ஒரு ஃபைட் வர வைக்க ட்ரை பண்றாரு பிக்பாஸ்.. அது நல்லா தெரியுது.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டம்மியா இருக்காங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஃபைனல் வீக்கு கூட கன்டென்ட் இல்லாம ஏற்கனவே கொடுத்த டாஸ்க்க ஏன் மறுபடியும் கொடுத்து.. கிரியேட்டிவ் டீம் இவ்ளோ டம்மியா இருக்காங்க.. என்று விளாசியுள்ளார்.

வெளியே அனுப்புங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா இது சேம் டாஸ்க் ஃபைனல் வீக்குல ரிப்பீட் ஆகுது.. எவிக்ட்டான கன்டெஸ்டென்ட்ஸ வெளியே அனுப்புங்க.. ஃபைனலிஸ்ட் அவர்களுடைய விளையாட்டை விளையாடட்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











