வெளங்குன மாதிரிதான்.. அன்பு கேங்க அனுப்பி குழப்பி விட போறாங்க.. விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் விஜய் டிவியை கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதன்படி அன்பு கேங்கை சேர்ந்த அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வந்துள்ளனர். மேலும் நடிகை ரேகாவும் வந்துள்ளார்.

ஆரியின் பெயரை கெடுக்க
இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா என்ன குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தப் போகிறாரோ என பதறியுள்ளனர். கடைசி வாரத்தில் கூட் ஆரியின் பெயரை கெடுக்க அனுப்பி வைத்துள்ளீர்களே என்று விஜய் டிவியை விளாசியுள்ளனர்.

ஆரிக்கு டெஸ்ட்..
அர்ச்சனா வந்து குழப்பி விட்டு போக போகுது!! நீ டபுள் எவிக்சன் பண்ணாம ரம்யாவை வச்சி இருக்கும் போதே தெரியும்டா நீ எதோ வேலை பண்ணுவனு.. ஆரிக்கி டெஸ்ட் மேல டெஸ்ட்!!ஒரு வழி பண்ண போறாங்க ஆரியை என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அன்பு கேங்க அனுப்பி..
இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், சனம் சுரேஷல்லாம் அனுப்பாம.. அன்பு கேங்க முதல்ல அனுப்பி குழப்பி விட போறாங்க என்று பதிவிட்டுள்ளார்.

சொல்லிட்டு போகட்டும்
பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா மீண்டும் வந்துள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த காண்டு மம்மி கடவுள் இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு சொல்ல வந்துயிருப்பாங்க போலிருக்கே! சொல்லட்டும்... சொல்லிட்டு போகட்டும்! என பதிவிட்டுள்ளார்.

ஒரு வழி பண்ணலாம்
பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா வந்துள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், பாஸ்! காண்டு மம்மியும் அவங்க குருப்பும் உள்ளே போனதை நான் பார்த்தேன் பாஸ்! வாங்க ஒரு வழி பண்ணலாம்! என பதிவிட்டுள்ளார்.

அவமானம் விஜய் டிவி
அன்பு கேங் உள்ளே வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்பவே அருவருப்பாக உள்ளது. ஆரியை டீமோட்டிவ் பண்ண எல்லா வழியையும் பார்க்கிறார்கள், உங்களுக்கு அவமானம் விஜய் டிவி என விளாசியிருக்கிறார்.

அலர்ட் ஆகுங்க..
அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் வந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், வெளியே போனவங்க மறுபடியும் உள்ளே வந்துட்டாங்கடா!... அலார்ட் ஆகுங்க! என பதிவிட்டுள்ளார்.

எப்பவும் தூங்கும் ரமேஷ்
இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் வீட்டில் மீண்டும் லூசுகள் வந்தாச்சு!!! அன்பு ஜெயிக்கும் சொன்ன அர்ச்சனா.. கடவுள் இருக்கான் குமாரு!! அப்பா.. அப்பா.. நிஷா..எப்பவும் தூங்கும் ரமேஷ்!!! என எல்லோரின் செயல்பாடுகளையும் கலாய்த்துள்ளார்.

விளங்கின மாதிரிதான்
இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாஸ் வாரத்தின் முதல் நாள் திங்கள் அதுமா இதுங்கள ஏன்யா உள்ள விட்ட இந்தவாரமே விளங்கிய மாதிரி தான் என விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











