twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லா ஏமாத்துறாய்ங்கய்யா.. இனிமே பிக்பாஸே பார்க்கப் போறதில்ல.. விரக்தியில் விளாசும் ரசிகர்கள்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே அதிக கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை தொடங்கி கொடுத்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

    பிக்பாஸ் வீட்டின் மூத்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி, ரொம்பவே ஸ்போர்ட்டிவாக விளையாடி வந்தார். இளம் போட்டியாளர்கள் பலருக்கும் டஃப் கொடுத்து வந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

    பாலாஜிக்கு இப்போ வரைக்கும் ரெட் கார்டு கொடுக்கல.. ஒருவேளை அப்படி வச்சு செய்யப்போறாங்களோ?!பாலாஜிக்கு இப்போ வரைக்கும் ரெட் கார்டு கொடுக்கல.. ஒருவேளை அப்படி வச்சு செய்யப்போறாங்களோ?!

    இம்ப்ரஸ் செய்துவிட்டார் மனுஷன்

    இம்ப்ரஸ் செய்துவிட்டார் மனுஷன்

    சுரேஷ் சக்கரவர்த்தி விளையாடும் ஸ்டைலை பார்த்து அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். ஆர்மி தொடங்கும் அளவுக்கு இம்ப்ரஸ் செய்துவிட்டார் மனுஷன். இந்த வாரம் சோம சேகர்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.

    ஏமாத்துறாங்கய்யா..

    ஏமாத்துறாங்கய்யா..

    இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசிகர்கள், விஜய் டிவியை கழுவி ஊற்றி வருகின்றனர். நல்லா இருக்குடா உங்க நியாயம் என்றும் நல்லா ஏமாத்துறாங்கய்யா இனிமே பிக்பாஸே பார்க்கப்போவதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    நல்லா இருக்குடா..

    பதிவான ஓட்டுகள் குறித்த தகவலை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், இதில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரை வைத்துக் கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி நல்லா இருக்குடா உங்க நியாயம் என கூறியுள்ளார்.

    பார்க்கவே போவதில்லை

    பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளதால் இனிமேல் பிக்பாஸே பார்க்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    கவலைப்படாதீங்க

    சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்த இந்த நெட்டிசன், சுரேஷ் சக்கரவர்த்தி சார் உங்க புது டிஷ்க்காக மக்கள் வெய்ட் பண்ணுறாங்க.. கவலைப்படாதீர்கள் எல்லாம் நன்மைக்கே.. என குறிப்பிட்டுள்ளார்.

    வெளியேறினார்

    பிக்பாஸ் சீசன் 4 தொடக்கத்தில் அனைவரையும் அதிர வைத்த சுரேஷ் சக்கரவர்த்தி இன்று வெளியேறினார்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    பை பை பிக்பாஸ்

    சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரொம்ப வருத்தமடைந்துள்ள இந்த நெட்டிசன், பை பை பிக்பாஸ் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே முழுக்கு போட்டுள்ளார்.

    இரண்டாவது சான்ஸ்

    இன்னும் உள்ளே இருக்கும் சில தகுதியற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை தங்குவதற்கு தகுதியானவர். என்னை போன்ற சிலர் பிக்பாஸ் பார்க்க அவரும் ஒரு காரணம், அவருக்கு இரண்டாவது சான்ஸாவது கொடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens slams Vijay TV for sending out Suresh Chakravarthy. Suresh Chakravarthy evicted from Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X