மிச்சர் முழுங்கி ஷிவானி இந்த வேலையை மட்டும் சரியா பண்ணுது..விஜய் டிவி மீமை பார்த்து காண்டான ஃபேன்ஸ்!
சென்னை: விஜய் டிவி வெளியிட்டுள்ள மீம்மை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானி நாராயணனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானியும் பாலாஜி முருகதாஸும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.
ஊட்டிவிடுவது, மசாஜ் செய்வது, மடியில் படுப்பது என வேற மாதிரி செல்கிறது அவர்களின் ட்ராக்.

நெருக்கம் குறையல
இது காதல்தான் என என்று உறுதியான நிலையில் ஷிவானியை காதலிக்கவில்லை என்றார் பாலாஜி. இருந்தபோதும் அவர்களுக்குள் உள்ள நெருக்கம் கொஞ்சமும் குறையவில்லை.

காத்திருந்த ரசிகர்கள்
இந்நிலையில் இன்று பிக்பாஸின் மூன்றாவது புரமோ வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். அதற்காக பல முறை விஜய் டிவியின் டிவிட்டர் புரஃபைலை ரெஃபிரஷ் செய்து பார்த்தனர்.

ரொம்ப படுத்தறான்பா
ஆனால் கடைசி வரை மூன்றாவது புரமோவை வெளியிடாத விஜய் டிவி, ஷிவானியும் பாலாஜியும் பெட்டில் அருகருகே அமர்ந்திருக்கும் ஒரு மீமை ஷேர் செய்துள்ளது. அதற்கு இவன் வேற என்னைய ரொம்ப படுத்துறான்பா என்று கேப்ஷன் கொடுத்துள்ளனர்.

நீயும் மிக்சர் சாப்டுறீயா
இதனை பார்த்த நெட்டிசன்கள், விஜய் டிவியை விளாசியுள்ளனர். மீமை பார்த்த இந்த நெட்டிசன், மூன்றாவது புரமோ போடாம நீயும் மிக்சர் துன்னுறியா பிக்பாஸ்? அப்புறம் இந்த பயில்வான் கூத்தடிக்கிற கருமத்தயெல்லாம் பார்க்கனுமா? யோவ் பிக்பாசு போயா பொத்திகினு! என சாடியிருக்கிறார்.

இப்படி போஸ்ட் போடாத..
விஜய் டிவி ஷேர் செய்த மீமை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், இந்தா ஒருவா.. இனிமே இப்படி போஸ்ட் போடாத என குறிப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.

மிக்சர் முழுங்கி ஷிவானி
ஷிவானி நாராயணன் பாலாஜியுடன் கடலை போடும் இந்த மீம்ஸை பார்த்த இந்த நெட்டிசன், மிச்சர் முழுங்கி ஷிவானி இந்த வேலையை மட்டும் சரியா பண்ணுது என திட்டி தீர்த்துள்ளார்.

போர் அடிக்குது
பிக்பாஸ் சார், இந்த லவ் ட்ராக் வேண்டாம்.. லாஸ்லியா கவின் மாறி எல்லாம் இல்ல. உண்மையா போர் அடிக்குது.. அதுக்கு சோம், ரியோ, நிஷா, கேபி காமெடி கூட நல்லா இருக்கும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











