கவின் ஆணவக்கொலை.. பூமர் தனமாக பேசும் தர்பூசணி திவாகர்.. லைட்டா ஹரி நாடார் வாடை அடிக்குதே!

சென்னை: கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம் என்றால் அது நெல்லை கவின் ஆணவப்படுகொலை குறித்துதான். அக்காவுடன் காதலில் இருந்தார் என்ற காரணத்திற்காக தம்பி செய்த ஆணவக்கொலை குறித்த பேச்சுதான் மொத்த தமிழ்நாடும் பேசிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டா பிரபலமான வாட்டர்மெலன் திவாகர் அதாவது தர்பூசணி திவாகர் தெரிவித்துள்ள கருத்துக்கு இணையத்தில் அவரைப் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கி வருகிறார்கள்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த விவாகாரம் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக அரசியல் தளத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக மாறியது. காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாருக்காக குரல் எழுப்பிய பலரும் கவினுக்காக எதுவும் பேசாமல் கப்சிப் என இருந்தார்கள். இந்த விவகாரத்தில் கவினுக்கு ஆதரவாக இருந்த பலரும், இணையத்தில் வெளுத்து வாங்கியது அரசியல் தளத்தில் இருந்த மூவரைத்தான். அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்றைக்கு திராவிடத்திற்கு மாற்று என தங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

Netizens Slams Watermelon star Diwagar Worst Opinion For Nellai Kavin Honor Killing

இவர்கள் மூவருருக்கும் இணையவாசிகள் கொடுத்த எதிர் கருத்துக்களுக்கு இதுவரை பதில் இல்லாமல் உள்ளது. ஆட்சியில் உள்ள திமுக மீது பல விமர்சனங்கள், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி வேங்கை வயல் விவகாரத்தில் எப்படி பெட்டிப்பாம்பாக அமைதியாக இருந்தாரோ, அதே போல் இந்த விஷயத்திலும் கப்சிப் எனவும் விமர்சிக்கப்படுகிறார். அஜித்குமார் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விஜய், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, அல்லது பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தாருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்றோ எதுவும் கூறவில்லை.

ஹரி நாடார்: இப்படியான நிலையில் இவர்கள் மூவருக்கும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், இணையவாசிகளாலும் கவின் படுகொலையை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஹரி நாடார். கவின் படுகொலைக்குப் பின்னர் இவர் தெரிவித்த பூமர் தனமான கருத்துக்களுக்காகவே இவர் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக கவின் தனது சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார். சுபாஷினி வீட்டில் எதிர்ப்பு வந்தவுடன் சுபாஷினியுடன் பேசுவதை நிறுத்தி இருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என மிரட்டல் விடுக்கும் தொனியில் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இதனாலே இவர் இணையவாசிகளால் அதிகப்படியான கண்டனத்திற்கு ஆளானார்.

Netizens Slams Watermelon star Diwagar Worst Opinion For Nellai Kavin Honor Killing

பூமர் பூசணி: குறிப்பாக யாரு இவர் 2025இல் பூமர் தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுகிறாரே, அவர் மீது காவல்துறை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எல்லாம் கருத்துகள் எழுந்து வந்தது. இப்போது அந்த பட்டியலில் வாட்டர் மெலன் திவாகரும் இணைந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கவின் ஆணவக்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதாவது, " சுர்ஜித் நம்ம முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இளம் பெண்கள் தங்களது குடும்பத்தில் என்ன சொல்கிறார்களோ அதை கேட்க வேண்டும். கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" என பூமர் தனமாக பேசியுள்ளார். இதனால் இணையவாசிகள் மத்தியில் ஹரி நாடாருக்கு அடுத்து தர்பூசணி திவாகருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X