நீங்களே விருது கொடுக்க வைத்து.. அப்புறம் ஏன் கொடுத்தீங்கன்னு பஞ்சாயத்து வேற.. ரசிகர்கள் கலாய்!

சென்னை: கடந்த வாரம் அபிநயை காப்பாற்ற சுருதியை வெளியே அனுப்பிட்டாங்க பிக்பாஸ் வாக்கெடுப்பு ஒரு பித்தலாட்டம் எல்லாமே ஸ்க்ரிப்டட் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்த நிலையில் தான் கமல் சார் இந்த வாரம் ஸ்க்ரிப்டட் பற்றி பேசியுள்ளார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

3வது புரமோவில் ராஜு பாயாக படு மாஸாகத் தான் காட்டிய நிலையில், இதை ஒட்டுவைக்கத் தான் இந்த வாரமும் பிக் பாஸ் ஷோ நடத்துனீங்களா? என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

விருது கொடுக்காமல் சும்மா இருக்க முடியாதுன்னு அவங்களே சொல்வாங்களாம்.. அப்புறம் ஏன் கொடுத்தீங்கன்னு கமல் சார் பஞ்சாயத்து பண்ணுவாராம் என முதல்வன் மீம்ஸ் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

சலாம் ராஜு பாய்

சலாம் ராஜு பாய்

விஜய் டிவியின் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகனை இந்த சீசனில் வின்னர் ஆக்கியே தீருவோம் என பிக் பாஸ் குழுவும் விஜய் டிவியும் முழு முயற்சியுடன் வேலை செய்து வருகிறது என ஒரு பக்கம் கழுவி ஊற்றினாலும், ராஜு ஜெயமோகன் தான் இந்த வீட்டிலேயே சிறந்த என்டர்டெயினர் மக்கள் சப்போர்ட் எப்போவும் ராஜுவுக்கு உள்ளது என சலாம் ராக்கி பாய் சாங் போட்ட எடிட்டருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஃபிக்ஸிங்

ஃபிக்ஸிங்

ராஜு தான் இந்த சீசனின் வின்னர் என தேர்வு செய்து விட்டனர் பிக் பாஸ் குழுவினர் என்றும் அவரை தியாகத்தின் சிகரமாக மாற்றுவது போல செய்து, மற்ற போட்டியாளர்களை வில்லன்களாக்கி விஜய் டிவி ராஜு ஜெயமோகனை இந்த சீசன் டைட்டில் வின்னராக மாற்றப் போகிறது. இதற்கு கமல் பஞ்சாயத்து வேற என விளாசி வருகின்றனர்.

இதைத்தான் எதிர்பார்த்தோம்

இதைத்தான் எதிர்பார்த்தோம்

ஆண்டவர் செம.. இதைத் தான் நாங்கள் எதிர்பார்த்தோம் ராஜு.. செம.. பழி வாங்கும் எண்ணம் என்று சொன்னது மற்றும் ராஜு saveனு சொன்னது என இந்த புரமோ தான் இந்த சீசனிலேயே சிறந்த புரமோ எனக் கூறி ராஜு ரசிகர்கள் ஃபயர் மற்றும் ஹார்ட்டீன்களை விட்டு வருகின்றனர்.

ஓவர்சீன்

ஓவர்சீன்

அப்போ.. இந்த ஒட்டுமொத்த வாட்டர் டாஸ்க்கும் ராஜுவை கொண்டாட வைத்து முதல் நபராக சேவ் பண்ண தானா.. ஹவுஸ்மேட்கள் ராஜுவை கார்னர் செய்வது போல நடிக்க கமல் சார் அவரை போற்றி புகழ ரொம்ப ஓவர் சீனா இருக்கே என நெட்டிசன்கள் விளாசி உள்ளனர். ராஜுவையும் கமல் சாரையும் புகழ்ந்தும் மொத்தமும் டிராமா என விளாசியும் இரு தரப்பு கருத்துக்கள் எழுந்து வருவது தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சீசனாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

அபிநய் ரன்னர் அப்

அபிநய் ரன்னர் அப்

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சேவ் ஆகி வரும் அபிநயை இந்த சீசனில் ரன்னர் அப் ஆக்காமல் கமல் விடமாட்டார் போல என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரமும் அபிநய் சேவ் ஆகிவிடுவார் என எழுந்து வரும் கணிப்புகளால் நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X